கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the 'ஏ) இது நம்ம ஏரியா' Category

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Posted by

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

No responses yet

புத்தாண்டு இனியதாய் அமையட்டும்

Posted by

அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

2 responses so far

அம்மா.. நிவிக்கு ஆப்பி பத்டே வந்துச்

Posted by

இனிய இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிவிம்மா

3 responses so far

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Posted by

அனைவருக்கும் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

3 responses so far

ஒரு தேவதை வந்துவிட்டாள்

Posted by

அக்டோபர் 25, 2006

எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்..

நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள்

வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி

அன்புடன்
கீதா

10 responses so far

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Posted by

இனிய சகோதர, சகோதரிகளே

உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இனியவை நிறையட்டும் துன்பங்கள் குறையட்டும்.

இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் எல்லா நலமும் எல்லா வளமும் தந்து வாழ்த்தட்டும் என்று வணங்கி மீண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்வது

உங்கள் சகோதரி
கீதா

No responses yet

திசைகள் மார்ச் இதழில் என் சிறுகதை

Posted by

இந்த மார்ச் மாத திசைகள் இதழில் என் சிறுகதை இடம்பெற்றுள்ளது

தலைப்பு – செருப்பு

அன்புடன்
கீதா

No responses yet

நாலு மனமே நாலு நான் tag செய்வது நாலு

Posted by

சங்கிலி பதிவுங்கிறாங்க… Tagங்குறாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. கொஞ்சம் நாளாவே தமிழ்மணத்துல உலவ சந்தர்ப்பம் கிடைக்கலை.. அதனால இருக்கும்.

நம்ம ஆர்த்தி இந்த tagging விளையாட்டுக்கு என்னையும் கூப்பிட்டாங்க. சரின்னு நானும் விளையாட வந்துட்டேன்..

எனக்கு பிடிச்ச நாலு(+நாலு) விஷயங்களை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஒரு இது..

எனக்கு பிடிச்ச நாலு மனிதர்கள்
1. அம்மா&அப்பா (பிரிக்கக்கூடாதுல்ல)
2. அண்ணா
3. என் கணவர்
4. சுற்றமும், நட்பும்

எனக்கு பிடிச்ச நான் எழுதின கவிதைகள் நாலு
1.நட்பு – என் தோழிக்காக எழுதியது
2.தேடல் – எனக்குள்ளே ஒரு தேடல்
3.மதம் – மதம் பிடித்த மனிதருக்காக
4.கடலின் தாகம் – சுனாமியின் கோரப்பசி

எனக்கு பிடிச்ச நாலு கதைகள்
1. பொன்னியின் செல்வன் – கல்கி
2. சிவகாமியின் சபதம் – கல்கி
3. கடல் புறா – சாண்டில்யன்
4. மோகினித் தீவு – கல்கி

அடிக்கடி நுழையும் இணையதளங்கள்
1. www.google.com
2. www.gmail.com
3. www.thamizmanam.com
4. www.geeths.info (ஹிஹிஹி:) )

விரும்பிப் படிக்கும் வலைப்பதிவுகள்
1. சிவாவின் கீதம் சங்கீதம்
1. கைப்புள்ள
2. பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா
2. ஞானசேகர்
3. ஆர்த்தி
3. யோசிப்பவர்
4. சரவ்
4. கீதா (ஹிஹி 🙂 )
(என்னது ரெண்டு முறை எழுதி இருக்கனா.. இல்லையே எல்லார் பேரும் ஒருமுறைதானே எழுதி இருக்கேன் )

எனக்கு பிடித்த நாலு நிறங்கள்
1. எலுமிச்சையின் மஞ்சள் கலந்த பச்சை நிறம்
2. இளம்பச்சை நிறம்
3. பாசி நிறத்துல கொஞ்சம் வெளிரியது
4. ஊதா நிறம்

எனக்கு பிடித்த கார்டூன்கள்
1. டாம் & ஜெர்ரி
2. ஸ்கூபி டூபி டூஊ
3. சிப் அண்ட் டேல்
4. மிக்கி & டோனால்ட்

நான் tag செய்யும் நான்கு வலைப்பதிவுகள்
1.சிவா
2.பரஞ்சோதி
3.சரவ்
4.யோசிப்பவர்

வாங்க விளையாடலாம்

No responses yet

தினமலரில் என் வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது

Posted by

இன்றைய தினமலர் நாளிதழில் என்னுடைய “நினைவுகள் கனவுகள்” வலைத்தளம் இடம்பெற்றுள்ளது. தினமலருக்கும், என் பதிவு இடம்பெற முனைந்தவர்க்கும், இந்தத் தகவலை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
கீதா

2 responses so far