கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for March, 2005

தினக்கூலி

Posted by

பாலம் கட்டும் பணி..
இரும்புக் கால்களினூடே
நிலைத்த மனிதக் கால்கள்
இரண்டுக்கும் பேதமில்லை
நின்றால்தான் வாழும்
நலிந்தால் அழிந்துவிடும்..

No responses yet

பார்வைகள்..

Posted by

நீலம் பச்சையென்று
நித்தமொரு நிறம் பூட்டி
நீந்தவிட்டேன் வார்த்தைகளை

உருவில் மாற்றமுண்டு
உட்பொருளோ மாறவில்லை

உள்ளம் உயர்ந்திருக்க
ஊணுடம்பு தடையுமில்லை..

உட்பொருள் சரிசமமே
உண்மையிதை உணர்ந்திடுவாய்

No responses yet

போதை அரக்கன்

Posted by

அந்தோ எரிகிறதே
அடிமனமும் பதறியதே
பிஞ்சின் நிலையறிந்து
பேதைமனம் துடிக்கிறதே
பிஞ்சுகள் அறிந்திடாது
தீதுயாது புரிந்திடாது
நஞ்சினை கொடுத்தழிக்கும்
வஞ்சகரை தெரிந்திடாது
வந்தார் வாழவைப்போம்
வினைகளினை தூரவைப்போம்
பண்பாடு போற்றிடுவோம்
சந்ததியைக் காத்திடுவோம்
பிள்ளைகள் தேடிவரும்
பெரும்பகையை நாமழிபோம்

No responses yet