கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for February, 2006

நாலு மனமே நாலு நான் tag செய்வது நாலு

Posted by

சங்கிலி பதிவுங்கிறாங்க… Tagங்குறாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. கொஞ்சம் நாளாவே தமிழ்மணத்துல உலவ சந்தர்ப்பம் கிடைக்கலை.. அதனால இருக்கும்.

நம்ம ஆர்த்தி இந்த tagging விளையாட்டுக்கு என்னையும் கூப்பிட்டாங்க. சரின்னு நானும் விளையாட வந்துட்டேன்..

எனக்கு பிடிச்ச நாலு(+நாலு) விஷயங்களை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஒரு இது..

எனக்கு பிடிச்ச நாலு மனிதர்கள்
1. அம்மா&அப்பா (பிரிக்கக்கூடாதுல்ல)
2. அண்ணா
3. என் கணவர்
4. சுற்றமும், நட்பும்

எனக்கு பிடிச்ச நான் எழுதின கவிதைகள் நாலு
1.நட்பு – என் தோழிக்காக எழுதியது
2.தேடல் – எனக்குள்ளே ஒரு தேடல்
3.மதம் – மதம் பிடித்த மனிதருக்காக
4.கடலின் தாகம் – சுனாமியின் கோரப்பசி

எனக்கு பிடிச்ச நாலு கதைகள்
1. பொன்னியின் செல்வன் – கல்கி
2. சிவகாமியின் சபதம் – கல்கி
3. கடல் புறா – சாண்டில்யன்
4. மோகினித் தீவு – கல்கி

அடிக்கடி நுழையும் இணையதளங்கள்
1. www.google.com
2. www.gmail.com
3. www.thamizmanam.com
4. www.geeths.info (ஹிஹிஹி:) )

விரும்பிப் படிக்கும் வலைப்பதிவுகள்
1. சிவாவின் கீதம் சங்கீதம்
1. கைப்புள்ள
2. பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா
2. ஞானசேகர்
3. ஆர்த்தி
3. யோசிப்பவர்
4. சரவ்
4. கீதா (ஹிஹி 🙂 )
(என்னது ரெண்டு முறை எழுதி இருக்கனா.. இல்லையே எல்லார் பேரும் ஒருமுறைதானே எழுதி இருக்கேன் )

எனக்கு பிடித்த நாலு நிறங்கள்
1. எலுமிச்சையின் மஞ்சள் கலந்த பச்சை நிறம்
2. இளம்பச்சை நிறம்
3. பாசி நிறத்துல கொஞ்சம் வெளிரியது
4. ஊதா நிறம்

எனக்கு பிடித்த கார்டூன்கள்
1. டாம் & ஜெர்ரி
2. ஸ்கூபி டூபி டூஊ
3. சிப் அண்ட் டேல்
4. மிக்கி & டோனால்ட்

நான் tag செய்யும் நான்கு வலைப்பதிவுகள்
1.சிவா
2.பரஞ்சோதி
3.சரவ்
4.யோசிப்பவர்

வாங்க விளையாடலாம்

No responses yet

படிக்கல்

Posted by

மாணவனாய் இரு
ஆசான் ஆவாய்

ரசிகனாய் இரு
கலைஞன் ஆவாய்

வாசகனாய் இரு
வாசிக்கப் படுவாய்

மனிதனாய் இரு
மகான் ஆவாய்

அன்பாய் இரு
உலகை ஆள்வாய்

No responses yet

தினமலரில் என் வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது

Posted by

இன்றைய தினமலர் நாளிதழில் என்னுடைய “நினைவுகள் கனவுகள்” வலைத்தளம் இடம்பெற்றுள்ளது. தினமலருக்கும், என் பதிவு இடம்பெற முனைந்தவர்க்கும், இந்தத் தகவலை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
கீதா

2 responses so far

..தினங்கள் தேவையில்லை

Posted by

உள்ளத்துக் காதலை
உணர்த்துவதற்கு
காதலர் தினம் வரை
காத்திருக்கத் தேவையில்லை

தாய்மையின் பெருமையை
போற்றுவதற்கு
அன்னையர் தினம்தனை
எதிர்நோக்கத் தேவையில்லை

பெண்களின் மதிப்பை
கொண்டாடுதற்கு
மகளிர் தினம் வரை
ஓய்ந்திருக்கத் தேவையில்லை

ஒத்திவைத்தல் எதற்காக?
‘அடைக்குந்தாழ்’ எதற்காக?

உள்ளத்து அன்போடும்
உயர்வான பண்போடும்
சீரிய கருத்தோடும்
சிறந்த பணிவோடும்
வாழ்ந்திருபோமேயானால்
வாழும் நாளெல்லாம்
அத்தகைய நாட்கள்தாம்

No responses yet