கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for March, 2006

ஜீவாவின் – வெண்பா வடிக்கலாம் வா

Posted by

ஜீவாவின் வெண்பா ஆர்வத்தினால் விளைந்த பயன் இது.

ஒருவழியா வெண்பாவும் தட்டிட்டு வந்தேன்
இருவிழியால் ஒப்பிட்டு பாரு – பொருந்தி
வரவேண்டும் என்றே வணங்கியே நின்றேன்
அரங்கனே உன்தாள் சரண்

கடைசி வரி நான் மாத்திட்டேன்.. வெண்பவுக்கு இன்னொரு இலக்கணமும் இருக்கு அது என்னன்னா அடிதோரும் மோனை அமைஞ்சிருக்கணும். குறைஞ்சது இரண்டு சீருக்காவது சீர்மோனை அமைஞ்சிருக்கணும். அதுதான் சரி. (சரிதானே கொஞ்சம் விசாரிச்சு பாருங்க?? )

நான் எழுதியதில் அடிதோரும் சீர்மோனை அமைந்திருக்கிறது (மற்றதெல்லாம் நீங்க சரிபார்த்து வெண்பாவா இல்லை சும்மாவான்னு சொல்லுங்க 🙂 )

வெண்பாவும் – வந்தேன்
இருவிழியால் – ஒப்பிட்டு
வரவேண்டும் – வணங்கியே
அரங்கனே – உந்தாள்

எளிதான வெண்பா இலக்கணம்

மா முன் நிரை
விளம் முன் நேர்
காய் முன் நேர்

ஒருவழியா வெண்பாவும் தட்டிட்டு வந்தேன்
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா

(காய்-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நேரசையில ஆரம்பிக்கணும்)

இருவிழியால் ஒப்பிட்டு பாரு – பொருந்தி
நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்
கருவிளங்காய் தேமாங்காய் தேமா புளிமா

(மா-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நிரையில ஆரம்பிக்கணும்)

வரவேண்டும் என்றே வணங்கியே நின்றேன்
நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநிரை நேர்நேர்
புளிமாங்காய் தேமா கருவிளம் தேமா

(விளம்-ல முடியும் சீருக்கு அடுத்த சீர் நேர்ல ஆரம்பிக்கணும்)

அரங்கனே உன்தாள் சரண்
நிரைநிரை நேர்நேர் நிரை
கருவிளம் தேமா நிரை

அண்ணே எல்லாம் சரியா இல்லை சொதப்பிட்டனா.. ஏதோ நான் புரிஞ்சுகிட்டதை இங்க எழுதிட்டேன்.. தப்புன்னா சொல்லுங்க. திருத்திக்கிறேன்

அன்புடன்
கீதா

4 responses so far

திருட்டுகள் அம்பலம்

Posted by

இருட்டுப் போர்வைக்குள் திருட்டுகள்
பகல் வெளிச்சத்தில் அம்பலம்
சிகரெட் துண்டுகள்

2 responses so far

மாற்றம்

Posted by

நேற்றும்
இந்த சாலையில்தான்
பயணித்ததேன்…

இதுவரை தெரியாத
மேடு பள்ளம்
இன்று தெரிகிறது..

என்னுள்
ஒர் உயிரின்
ஜனனம்.

One response so far

காலம்

Posted by

வட்டத்தினுள் சதுரத்தை
புகுத்திவிட நினைத்தேன்
ஆனால் இன்று
வட்டமே சதுரமாய்

***

புத்தம் புது சில்லறையா
சேர்த்து வச்சும் வீணாச்சே..
செல்லாக் காசு

***

கல்மனசும் கரையுமின்னு
கால் கடுக்க காத்திருந்தேன்..
கரைந்தது..
காலம்

No responses yet

திசைகள் மார்ச் இதழில் என் சிறுகதை

Posted by

இந்த மார்ச் மாத திசைகள் இதழில் என் சிறுகதை இடம்பெற்றுள்ளது

தலைப்பு – செருப்பு

அன்புடன்
கீதா

No responses yet