கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for November, 2010

முற்பகல் செய்யின்..

Posted by

குழந்தைகள் காப்பகம்
விட்டுச்சென்றவர் வசிப்பது
முதியோர் இல்லம்

oOo oOo oOo oOo oOo oOo oOo

அன்று…
கதை கேட்ட உன்னிடம்
கார்டூன் பார் என்றேன்
விளையாட அழைத்தபொழுதோ
வீடியோ கேம் கொடுத்தேன்
தாலாட்டு பாடென்றாய்
டீ.வி பார்த்து துயிலென்றேன்
கட்டி அணைத்தபொழுதும்
கணினியில் மூழ்கிக்கிடந்தேன்
விழிகசியக் காத்திருந்தாய்
வேலையே கதியென்றிருந்தேன்
காலங்கள் உருண்டோடின
இன்று
உதவட்டுமா என்று கேட்டேன்
உனக்கொன்றும் தெரியாதென்றாய்
எப்பொழுது வருவாயென்றேன்
எரிதம் போல் என்னைப் பார்த்தாய்
ஏதேனும் பேசுவாயோ
என நானும் ஏங்கிப் பார்த்தேன்
இயலாத எனக்குத் துணையாய்
இயந்திரங்கள் விட்டுச் சென்றாய்…

3 responses so far

மௌலியின் “ஃப்ளைட் 172”

Posted by

சமீபத்தில் தான் இந்த நகைச்சுவை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வயிறு வலிக்கச் சிரித்தேன், வெகு காலத்திற்குப் பிறகு. மிகவும் அருமையான படைப்பு.

அதிலிருந்து சில காணொளிகள் இங்கே

1. நாதஸ்வரம் என்றால் என்ன? ஆங்கிலத்தில் விளக்குகிறார் மௌலி

2. தவில் – இதை மௌலி ஆங்கிலத்தில் விளக்கும் காட்சி

3. மௌலியின் ஆங்கில விளக்கதைக் கேட்டவரின் நிலை

One response so far

நினைவாஞ்சலி

Posted by

எனது அருமை அக்கா
எப்படி முடிந்தது உன்னால்
எமை விட்டுச் செல்ல
எப்படி முடிந்தது உன்னால்
தீபாவளித் திருநாள் இன்று
தீபா வலியென்றே உணர்ந்தேன்
அலைபேசி தனைக் கொண்டு
அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன்
உன் எண்ணைக் கடக்குந்தோறும்
உள்ளமெல்லாம் பதறுதம்மா…
பொத்திப் பொத்தித் தாளாமல்
பொங்கி வரும் சோகத்தை
இத்தனை நாள் பேசாத
என் கவிதை சொல்லிடுமா?
மருதாணிச் சிவப்பை நீ
மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே
காலன் கொண்டு சென்றானே
காலம் பார்த்து வந்தானோ?
நீ இல்லை எனும் நினைவே
நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யோ
வலி சிக்கிய தொண்டை
விழுங்கிடுமா சோகத்தை?
கண்களில் திரளும் நீர்
கரைத்திடுமா காயத்தை??
நீங்காத உன் நினைவை
நெஞ்சமெங்கும் சுமந்திருந்தும்
நீயில்லாத வெற்றிடத்தை
நிரப்பும் வழி ஏதும் உண்டோ??

3 responses so far

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Posted by

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அன்புடன்
கீதா

No responses yet