கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)

Filed under அ) கவிதைகள் by

பிஞ்சுகள்

புள்ள உசுர காக்கத்தானே
தடுப்பு ஊசி போட வந்தேன்..
உசுரையே கொன்னுப்போட்டா
எங்க போயி முறையிடுவேன்..
பூவப்போல சிரிச்ச புள்ள
துவண்டு மேல சரிஞ்சதய்யா..
மழலை பேசும் வாயிலெல்லாம்
நுரை ததும்பி வழிந்ததய்யா..
தத்தித்தத்தி வந்த புள்ள
தடம் புரண்டு கிடக்குதய்யா..
பெத்த மனம் தாங்கல்லியே
சொல்லிச்சொல்லி மாளலியே
என்ன சாக்கு சொல்லப்போற
யார குத்தம் சொல்லப்போற
எம் புள்ள எனக்கு வேணும்
எப்ப திருப்பித் தரப்போற..

புகைப்படம் : நன்றி தினத்தந்தி

2 responses so far

2 Responses to “ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)”

  1. 1 jkron 24 Apr 2008 at 10:34 am

    தினத்தந்தியா தினத்தந்தையா?

  2. 2 கீதாon 24 Apr 2008 at 10:46 am

    நன்றிங்க குமரன் திருத்திட்டேன்.

Trackback URI | Comments RSS

Leave a Reply