கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

மனதின் கதை..

Filed under அ) கவிதைகள் by

கையில் கிடைக்காத
மனதின் கதை கேட்டேன்
கற்பனை ஆனாலும்
கதையில் சுவையுண்டு
பிரம்மன் படைத்திட்டான்
புவியில் மனித இனம்
மறைந்தே இருப்பதுதான்
மனதின் பெருமையென்று
தேடி அலைந்திட்டான்
அவனின் மனதுக்கிடம்
புவியில் புதைத்திட்டால்
குடைந்தே எடுத்திடுவான்
வெளியில் மறைத்திட்டால்
பறந்தே பிடித்திடுவான்
எவ்விதம் வைப்பதென
யோசனை மிகக்கொண்டான்
கண்டான் சிறந்த இடம்
மனிதன் உடலே அ·து
எங்கும் தேடும் மனிதன்
தன்னுள் தேட மாட்டான்
தேடத் துவங்கும் அந்நாள்
வாழ்வின் அர்த்தம் புரியும்
கதையும் முடிந்தது அங்கே
தேடல் துவங்கிடும் இங்கே

2 responses so far

2 Responses to “மனதின் கதை..”

  1. 1 நவன்on 07 Oct 2007 at 2:04 am

    அருமையான கவிதை ரொம்பவும் ரசிச்சுப் படித்தேன்.

  2. 2 கீதாon 15 May 2008 at 9:58 am

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நவன்

    அன்புடன்
    கீதா

Trackback URI | Comments RSS

Leave a Reply