கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

பூக்களில் உறங்கும் மௌனங்கள் (1)

Filed under அ) கவிதைகள் by

சாலையோர பூக்கள்

நெரிசலான மனங்களுள்
நுழைய முடியாமல்
நெடுஞ்சாலை ஓரத்தில்
பார்வையின் தூரத்தில்
பூக்களில் உறங்கும்
மௌனங்கள்

7 responses so far

7 Responses to “பூக்களில் உறங்கும் மௌனங்கள் (1)”

 1. 1 சதீஷ்on 07 Jan 2008 at 4:00 pm

  உறங்கட்டும் விட்டுவிடுங்கள்
  மௌனமாய் இருந்து கொண்டே ஒரு கவிதைக்கு வித்திட்டு இருக்கிறதே !

  அது என்ன தலைப்பில் ஒரு (1) , மற்ற பகுதிகள் எப்போது வெளியீடுவீர்கள்?

 2. 2 Raghavanon 10 Jan 2008 at 8:47 am

  வணக்கம் அக்கா. என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். 🙂

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  நச்ச்சுனு இருக்கு கவிதை! பூக்களைத் தொந்திரவு செய்யாதீர்கள் 🙂

 3. 3 Navanon 12 Jan 2008 at 11:26 pm

  அக்கா, உங்களின் இந்த ஹைக்கூ கவிதை சூப்பர்.

  நல்ல கற்பனை.

  இம்மௌனங்கள் அந்த மனங்களின் உள்ளே நுழைய பார்வை மட்டும் போதுமா? ஸ்பரிசம் வேண்டாமா?

 4. 4 Sathishon 13 Jan 2008 at 12:32 am

  இத்தனை சுருக்கமாய் நச் என்று எழுத முடியுமா?? அழகு!

 5. 5 Navanon 13 Jan 2008 at 10:57 am

  உங்கள் கவிதை அருமை.

  நச்சுனு இருக்கு.

 6. 6 Saravon 28 Jan 2008 at 1:37 am

  இந்தப் பூக்கள் தந்த மகரந்த ‘மது’வை அருந்திய வண்டுகள், போதையில் காதோடு பாடும் ‘சஹானா’ கூட மௌனத்தின் உறக்கத்தை கலைக்கவில்லை போலும்!! 🙂

 7. 7 பாலமுருகன்on 27 Feb 2008 at 8:31 am

  ரத்தினச்சுருக்கத்தில் அருமையான கவிதை. ஏறக்குறைய சில வாரங்களுக்கு முன்பு இதே மாதிரி ஒரு காட்சி எனக்கு.. சாலையின், பச்சை விளக்குக்காக காத்திருந்த போது கிடைத்தது. அப்போதிலிருந்து, இதை எப்படி கவிதையாக்குவது என்று பலவிதங்களில் யோசித்துக் கொண்டிருந்தேன்.. இன்று, உங்களின் கவிதையைப் பார்க்கும் போது பிரமிப்பே மிஞ்சுகிறது..

Trackback URI | Comments RSS

Leave a Reply