கீதாவின் கிறுக்கல்கள்

என் எண்ணங்கள்

Archive for the tag 'காதல்'

அமரக் காதல்

Posted by

பொத்திவைத்த ஆசைகளை
இரகசியமாய் திறந்துவைத்து
உனக்கான என் அன்பை
உதிராத பாசப் பூவை
நமக்கு மட்டும் புரிந்திருக்கும்
நயன பாஷைக் கவிதைகளை
அழகாய்த் தேர்ந்தெடுத்து
அற்புதமாய்க் கோர்த்துவைத்தேன்
மடலினைக் கண்டுக் கண்டு
நாளெல்லாம் இன்பமுற்றேன்
உனக்கதை அனுப்பிட்டால்
எத்தனை நீ இன்புறுவாய்..
விழிகளின் வார்த்தையன்றி
வேறொன்றும் பேசிலோம் நாம்
வாய்ச்சொற்கள் தேவையில்லை
மனதினை மனம் அறியும்
ஆனாலும்…
சொல்லிடத் தோன்றவில்லை
இதயங்கள் கிழிபடலாம்..
அதனால்..
சொல்லிட்ட திருப்தியுடன்
மடலினை கிழித்துவிட்டேன்
இனி..
இந்த பூமியுள்ளவரை
இருவர் இதயங்களிலும்
வாழும் நம் அமரக் காதல்

No responses yet

காதலிசம்

Posted by

எல்லோரும் சொல்கிறார்கள்..

நொடிப்பொழுதும் உன்னை
மறவாத என் மனதுக்கு
மறதி வந்துவிட்டதுவாம்..

கணம்தோறும் உன்குரலில்
மூழ்கும் என் செவிக்கு
கேட்கும் சக்தி இல்லையாம்

நாள்தேறும் உன்னுருவம்
காணும் என் விழிகள்
பார்வை இழந்துவிட்டதுவாம்

இவையெல்லாம் உண்மைதானோ?

கண் எதிரில் தோன்றும் காட்சி
கருத்தினில் பதிவதில்லை

காதினிலே விழும் வார்த்தை
என்னவென்று விளங்கவில்லை

என்ன நான் செய்தேனென்று
எனக்கே புரிவதில்லை..

பிறகு..
அவர்கள் சொன்னது உண்மைதானோ?

No responses yet

காதலிசம்

Posted by

படிக்கும் முன் ஒரு முறை
நுகர்ந்து பார்க்கத் தூண்டும்
புத்தம் புதிய புத்தகத்தின் வாசமும்..

வீதியில் போகயிலும் நின்று
நாசி வரை நுழைந்து செல்லும்
அரைபடும் காப்பிக் கொட்டையின் வாசமும்..

வரண்டு போன பூமியில்
இயற்கை அன்னை கருணை மழை தூரி
கிளப்பி விட்டுச் செல்லும் மண் வாசமும்..

இவை எல்லாமும் கொடுக்கும் சந்தோஷம்
ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது
உன் பெயரை (சு)வாசிக்கும் ஒவ்வொரு முறையும்

No responses yet

காத்திருத்தல்..2

Posted by

காதலில்..
காத்திருத்தல் சுகம்
என்று யார் சொன்னது?
காத்திருந்து காத்திருந்து
மொழி மறந்து போனவனின்
உளரலாய் இருக்கும்.

காத்திருத்தல்…
நிமிடங்களை நீளச்செய்யும்
விஞ்ஞான அதிசயத்தை
வெகு சாதாரணமாய்
நிகழ்த்திக் கொண்டிருக்கும்
மவுன ராட்சசன்

(இது மீள்பதிவு)

One response so far

காத்திருத்தல்-1

Posted by

முதல்முறையா என்ன
மணிக்கணக்கில்
நிமிடங்களை எண்ணியபடி
செவிகளை தீட்டியபடி
தொலைபேசியை பார்த்தபடி
உனக்காக காத்திருப்பது
ஆனாலும் கூட
காத்திருத்தலின் அவஸ்த்தை
காலத்தின் உறைநிலை
மனதின் தேடல்
எதுவுமே பழையதில்லை
அன்றலர்ந்த மலராய்
அனுதினமும் எனக்காய்

No responses yet

காதலிசம்..2 (5-12-02)

Posted by

உன்னுடனே நான் பேச
எனக்கிங்கே சில நிமிடம்
ஒருநொடியில் பேசிவிட
வார்த்தைகள் ஓராயிரமாம்..

தோழி எனை அழைப்பதற்கு
இதுதான உகந்த நேரம்
சில நொடிகள் பேசிடினும்
மணிக்கணக்காய் தோன்றிடுதே..

ஓடாத கடிகாரம்
ஓடுவதேன் இந்நேரம்
சில நொடியும் பறந்துவிட
சிறகுகள் தாம் தோன்றியதோ

ஒரு நிமிடம் பேசிவிட்டேன்
உன்னுடனே என்னவனே
வாழும் என் உயிரிங்கு
இன்னும் ஒரு வாரகாலம்

No responses yet

காதலிசம்..1 (2-12-02)

Posted by

பேசாத உன் விழியால்
பேசுவது உன் இயல்போ?
சொல்லாத வார்த்தைகளை
சொல்வது உன் பார்வைதானோ?
கேளாமல் என் இதயம்
கேட்பதை நீ அறியாயோ?
செல்லாமல் செல்வதென்ன
என் உயிரும் உன்னோடு?

One response so far