சிப்பியென இமை மூடி..

அ) கவிதைகள்

சிப்பியென இமை மூடி செவ்விதழில் முகை சூடி சிகை வருடும் பிறை நுதலில் சிந்தை கவர் கண்ணே நான் சூல்கொண்ட நன்முத்தே என் இதழ்சூடும் புன்னகையே செப்புகிறேன் என் வாக்கை சிந்தையில் சேர் கண்ணே மூவிரண்டு வயதில் நீ முன்னூறு கதை படிப்பாய் நாலிரண்டு வயதில் நீ நன்மை பல கற்றிடுவாய் ஏழிரண்டு வயதில் நீ ஏற்றங்கள் பெற்றிடுவாய் எண்ணிரண்டு வயதில் நீ எழில் நிலவை எட்டிடுவாய் கண்ணிரண்டு துணைகொண்டு கசடற நீ உயர்ந்திடுவாய் எம்மிரண்டு உயிர் …

Continue Reading

வாழும் முறைமை எது?

அ) கவிதைகள்

விழி மூடித் திறக்கும் முன்னே மூவிரண்டு வயதாம் உனக்கு பட்டுப் பிள்ளை உன்னை – நான் பாடாய்ப் படுத்துகின்றேன் துள்ளி விளையாடும் போதில் துயில் கொள்ளத் துரத்துகின்றேன் பஞ்சு போல் உறங்கும் பொழுதோ பள்ளி செல்ல எழுப்புகின்றேன் மணியான உன்னைக் கிளப்ப மணி காட்டிப் பணிகள் சொல்வேன் உடைமாற்றி தலைசீவி உணவுண்டு ஒரே நேரம் எத்தனைச் செய்வாய்? பரபரப்பில் பாலைத் துறந்து பறந்து போவாய் பேருந்துக்கு பசிக்குமோ என்னவோ என்று பரிதவித்துக் காத்துக் கிடப்பேன்.. மயில் போல …

Continue Reading