பத்துக் காசு

அ) கவிதைகள்

உச்சி வெயில் வேளையிலே செல்லும் சாலை மீதினிலே ஒளியொன்று எழக் கண்டு வியப்புடனே அங்கு சென்றேன் மின்னலின் ஒளி தோற்கும் மின்னிய பொருளைக் கண்டேன் அழகிய பத்துக் காசு சுடர்விடும் பத்துக் காசு யாரதை விட்டுச் சென்றார் யாரதை எடுத்துச் செல்வார் எடுத்திட மனமிருந்தும் ஏதேதோ தடுத்ததென்னை குனிந்ததை எடுத்திட்டால் குறும்பவர் கேலிசெய்வர் குனிந்ததை எடுக்கலாமா கோவிலில் சேர்க்கலாமா அருகினில் இரப்பவர்க்கு எடுத்ததை அளிக்கலாமா பலவிதம் எண்ணிக்கொண்டு பாதையைப் பார்த்த போது கடந்தே வந்துவிட்டேன் காசினைக் கண்ட …

Continue Reading

நினைவுச் சுரங்கம்

அ) கவிதைகள்

நட்பின் கையொப்பம் தாங்கிய விலை மதிப்பிலாத ரூபாய் நோட்டு பரிசென வந்து பாடம்செய்யப்பட்ட பூக்களின் காய்ந்த துணுக்குகள் வகுப்புநேரத் தூதனாய் ஆக்கப்பட்ட நினைவுகள் தாங்கிய ஆஜர்த்தாள் தளிர் கரத்தால் எழுதிக்கொடுத்த அக்கா மகளின் அழகுக்கிறுக்கல் வீதியிலே கண்டெடுத்த காகிதம் கசங்கியும் கம்பீரமாய் பாரதி அன்பாய் அண்ணன் அனுப்பிய சாக்லெட்டின் மிஞ்சிய போர்வை புத்தகம் அனுப்புமாறு வேண்டி ஆசிரியர் அனுப்பிய அஞ்சலட்டை நட்பிற்கு அனுப்பிய பரிசினை கொண்டுசேர்த்தமைக்கான இரசீது சுதந்திர தினம்தோறும் பிரியமாய் சேகரித்துவைத்த தேசியக்கொடிகள் தொலைத்துவிட்ட தோழி …

Continue Reading

தொலைந்த கனவு

அ) கவிதைகள்

விளையாட்டாய்க் கோவில் கட்டி வீடுதோரும் அறிக்கை ஒட்டி பொத்தி பொத்தி சேர்த்த காசில் பொங்க வைத்தோம் ஆண்டு தோரும் எனக்கென ஒரு கூட்டம் எதிரணியும் ஒரு கூட்டம் இருவேறு முகிற்குழாமாய் இடியுடனே வாழ்ந்துவந்தோம் ஏரியில் மீன் பிடித்து கேணியில் துளையவிட்டு உச்சி வெயில் காயும்நேரம் சூழ்ந்து நின்று ரசித்திருந்தோம் வாதாம் மரத்தில் ஏறி வாகாய் ஊஞ்சல் கட்டி கேளிக்கைப் போட்டிவைத்து கொட்டைகளைப் பரிசளித்தோம் கோவிலும் காணவில்லை பூசையும் நடப்பதில்லை மரமும் மாறிப்போச்சு மதிலும் வீடுமாச்சு தனியொரு முகிலாய் …

Continue Reading

மனம் (19.4.2003)

அ) கவிதைகள்

மனம் என்பதோர் மந்திரப் பேழை என்றுமே அன்பினை யாசிக்கும் ஏழை நினைவுகள் எத்தனை கனவுகள் எத்தனை அமிழாதிருக்கும் நிகழ்வுகள் எத்தனை அடிநெஞ்சில் புதையுண்ட பொக்கிஷம் சிலவும் அழகழகாய்த் துள்ளும் மீனாய்ச் சிலவும் இத்துனை நினைவுகள் எங்கனம் வாங்கினாய்? இன்னும் பலவர ஏன் தான் ஏங்கினாய்? இன்பமென துன்பமென எங்கனம் பிரிப்பேன்? அத்துனையும் பொக்கிஷமே இறுதிவரை காப்பேன்

Continue Reading

தேடல் (24.7.2003)

அ) கவிதைகள்

உதிரத்தில் கலந்தென்னை ஊனுடம்பில் தேடுகின்றேன் இதயத்தின் உட்புகுந்து இடுக்கெல்லாம் தேடுகின்றேன் அறிவென்னும் ஒளிகொண்டு அகத்துள்ளும் தேடுகின்றேன் அன்பென்னும் விழிகொண்டு புறத்தினிலும் தேடுகின்றேன் உயிரென்பது தான் நானோ? உயிர் தங்கும் உடல் நானோ? அறிவென்பது தான் நானோ? அதைக்கடந்த நிலை நானோ? எது இங்கே நான் என்று என்னில் நான் தேடுகின்றேன் உடல் பிரிந்து உயிர் செல்லும் நாளில் தான் விளங்கிடுமோ?

Continue Reading

மனதின் கல்வெட்டுக்கள்( 26.08.2004 )

அ) கவிதைகள்

காலமது உருண்டு செல்ல கனவென மங்கும் நிஜத்தில் மீண்டுமொரு பயணம் புரிய உதவும் மன கல்வெட்டுக்கள் சுவையில் மனம் மகிழ்ந்திட்டாலும் ‘சுட’ யில் அது வெதும்பிட்டாலும் படையல் பல காத்திருக்கும் பந்தி மன கல்வெட்டுக்கள் அன்றை நினைவில் அகமகிழ அதனை சிந்தை அபகரிக்க இன்றை சிறார் பின்னொரு நாள் இந்த ஏக்கம் அடைகுவரோ? கடந்து வந்த பாதை இனிது நடக்கும் பாதை என்றும் புதிது வாழ்க்கை பயணப் பாதையெங்கும் மைல்கல் மன கல்வெட்டுக்கள்

Continue Reading