அடுப்பங்கரை

அ) கவிதைகள்

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி தென்ன மட்டய காயவச்சி வெறக நல்லா பொளந்துவச்சி அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி எண்ணை ஊத்தி எரியவச்சி மண் சட்டிய ஏத்தி வச்சி ஊதி ஊதி இருமி இருமி வறட்டி புகைய விரட்டி விரட்டி கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி அல்லும் பகலும் அனலில் வெந்து அமுதமுதாய்ச் சமைச்சிடுவ.. ரேஷன் கடை வாசல் போயி காலு வலிக்க கியூவில் நின்னு மண்ணெண்ணை வாங்கி வந்து பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி கையெல்லாம் வலிக்க வலிக்க …

Continue Reading

அருமை அம்மாவுக்கு..

அ) கவிதைகள்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். ****** என்ன எழுதுவதம்மா எதை எழுத நான் அம்மா என்றழைப்பதில்தான் எத்தனை சுகமெனக்கு.. உன் புடவைத் தலைப்புக்குள் ஒளிந்து கொண்டிருப்பேனே.. உன் மடிமீது தலைவைத்து உறங்கிப் போவேனே.. உன் கையால் சோறுண்ண நடுநிசியில் விழிப்பேனே.. வேலைக்கு நீ சென்றால்கூட வாசலிலேயே படுத்திருப்பேன் தெருமுனையில் உன்முகத்தை காணவேண்டித் தவமிருப்பேன்.. பண்டிகையோ விடுமுறையோ உனக்கெல்லாம் அடுப்படிதான் உனக்கெது பிடித்தாலூம் எனக்கு உண்ணத் தந்திடுவாய் எனக்கொரு நோயென்றால் ஊருக்கே தெரிந்துவிடும் உனக்கொரு நோயென்றால் …

Continue Reading

முதலெழுத்து..

அ) கவிதைகள்

கருவான நாள்முதல் கண்ணெனக் காத்தவள் உருவாக்கி என்னையும் உவகையோடு பார்த்தவள் வலிகளை மட்டுமே வாழ்நாளில் கண்டவள் இத்தனைப் பெருமையும் எந்தன் அன்னைக்கே முதலெழுத்து சூட்டுதற்கு தந்தை பெயர் மட்டும் கேட்பது ஏன்?

Continue Reading

..தினங்கள் தேவையில்லை

அ) கவிதைகள்

உள்ளத்துக் காதலை உணர்த்துவதற்கு காதலர் தினம் வரை காத்திருக்கத் தேவையில்லை தாய்மையின் பெருமையை போற்றுவதற்கு அன்னையர் தினம்தனை எதிர்நோக்கத் தேவையில்லை பெண்களின் மதிப்பை கொண்டாடுதற்கு மகளிர் தினம் வரை ஓய்ந்திருக்கத் தேவையில்லை ஒத்திவைத்தல் எதற்காக? ‘அடைக்குந்தாழ்’ எதற்காக? உள்ளத்து அன்போடும் உயர்வான பண்போடும் சீரிய கருத்தோடும் சிறந்த பணிவோடும் வாழ்ந்திருபோமேயானால் வாழும் நாளெல்லாம் அத்தகைய நாட்கள்தாம்

Continue Reading

அம்மா..

அ) கவிதைகள்

உன் மடியில் உறங்கி நீ ஊட்ட உண்டு உன் வசவில் சிணுங்கி உடன் பிறப்போடலைந்து உனை ஏய்த்து மகிழ்ந்து சின்னவளாகவே இருந்திருந்தால்.. சுற்றங்களை விடுத்து மணமொன்று புரிந்து மறுதேசம் நுழைந்து நிதமும் உனைத்தேடி நினைவினில் நீராடி ஏங்காது இருந்திருப்பேன்.

Continue Reading

உயிர்ப்பு

அ) கவிதைகள்

விகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை உயிர்ப்பு இருண்ட உலகத்தில் இருவராய் உருக்கொண்டோம் எனக்கு நீதுணையாம் உனக்கு நான் துணையாம் அன்னை உணவளிக்க ஆனந்தம் பலகண்டோம் அவள்முகம் கண்டிலோமவள் அன்பினை காண்கிறோம் உயிரினில் பங்களித்தாள் எனக்கும் உனக்குமாக எத்துனை இன்பமிங்கே அத்துனை உயர்ந்தவளுக்குள் உலகம் சுருங்கிட்டதுவோ உருவம் பெருகிட்டதுவோ இங்கே இருந்திடலாம் என்றெண்ணிய எண்ணம்பொய்யாக இன்னொரு உலகம் போக நாளும் நேரமும் நெருங்க பயத்தின் மிகுதியில் நாமும் பலவிதம் யோசிக்கின்றோம் அங்கென்ன இருக்குமென்றாய் இவ்வுலகே …

Continue Reading