ஜன்னலுக்கு அப்பால்..

அ) கவிதைகள்

சீரிய காற்றடிக்க சருகென உதிர்ந்த இலைகள் ஜிவ்வென மேலெழும்பி சிறகுடைய பறவை ஆகி விண்ணிலே நிரம்பி நின்று புள்ளென பயணம் செய்ய… உதவிக்கு வந்த காற்றும் உயரத்தில் விட்டுச் செல்ல அசையாமல் நின்றன மரங்கள் மழையென பொழிந்தன இலைகள் கருத்தது மேகம் தானோ கடல் அதில் குடிபுகுந்தானோ வைரத்தின் வாள்தனை வீசி படைநடுங்க கோஷங்கள் பேசி கடலவன் இறங்கியே வந்தான் மழையென்னும் பெயரினைக் கொண்டான் இயற்கையின் ஜாலம் இதனை வெறுத்திடும் மனிதரும் உண்டோ உண்டெனக் கண்டன விழிகள் …

Continue Reading

கடல்

அ) கவிதைகள்

கத்தும் கடல் சத்தம் அது எட்டும் திசை எட்டும் நித்தம் அதன் மட்டம் தனில் யுத்தம் உயிர் யுத்தம் விண்ணும் ஒளிக் கண்ணும் அதில் மின்னும் அலை மின்னும் பொன்னோ இது பொன்னோ என எண்ணும் விழி எண்ணும் பாடும் கடல் ஆடும் அதில் ஓடம் ஜதி போடும் தேடும் வலை தேடும் அதில் வாடும் உயிர் ஓடும் கொல்லும் பகல் கொல்லும் அதை வெல்லும் கலம் வெல்லும் செல்லும் அது செல்லும் மரம் (பாய்மரம்) சொல்லும் …

Continue Reading

பாலைவனச் சோலை

அ) கவிதைகள்

வீதியே வெந்திடும் வெப்பத் தணலில் ஓரமாய் பூத்திட்ட ஒற்றைச் செடியை நாடியே ஓடிடும் பட்டுக் குருகின் நாட்டியம் காண்கயில்.. அன்னையின் கைதனை அன்புடன் இறுக்கி அன்றலர்ந்த மலராய் இருவிழி விரிக்க தத்தையென தாவிடும் குழவியின் தளர் நடை காண்கயில்.. பல்வேறு கடமையும் கவலையும் சூழ தாவித் தாவித் தவித்துக் கொண்டு பாலையாய் போகும் முன்¨ர் நெஞ்சில் சோலை மலர்கிறது

Continue Reading

தூவானம்

அ) கவிதைகள்

பொடிப் பொடியாய் விழும் சர்கரைத் தூரல் விழிவிரித்து பார்க்கயிலும் வந்தவழி காணல் ரோமத்தில் நீ மிதக்க கண்ணுக்குள் ஜில்லிப்பு நாவில் விழுந்தவுடன் நெஞ்சுக்குள் தித்திப்பு கையில் குடையிருந்தும் விரிக்க மனமில்லை நனைத்துதான் செல்லட்டுமே தடையாயிங்கு குடையுமில்லை

Continue Reading

அதிகாலை அதிசயம்

அ) கவிதைகள்

அடைமழை பொழிந்ததன் சுவடு அழகாய் தெரிந்தது இங்கு ஆங்காங்கே திட்டுத் திட்டாய் அதிசயத் தடாகம் பட்டாய் குருகுகளின் குளியல் அறையோ அவையெந்தன் விழிகட்கு இரையோ சொட்டிய துளிகளின் சப்தம் செவிகளை தீண்டிடும் சொர்கம் விழித்தது செங்கதிரோனோ விடியலின் அழகிதுதானோ தங்கமுலாம் பூசிய இலைகள் வெள்ளிமணி சொட்டிடும் கிளைகள் கோர்த்திடும் எண்ணம் கண்டு தீண்டினேன் விரல்கள் கொண்டு உருகின விரல்களின் வழியே சிதறின மணிகளும் தனியே விழிகளின் சொந்தம் அழகோ? விரல்பட அழிந்தே விடுமோ?

Continue Reading

வெளிச்சத்துளி

அ) கவிதைகள்

இருள் கவிந்த நள்ளிரவில் நிலவும் உறங்கும் காரிருளிள் மின் இணைப்பும் உறங்கிவிட அவஸ்தையிலே விழித்து எழுந்தேன் அந்தகனின் நிலையில் நானும் அன்னை உடன் எழுந்து சென்று அழகு விளக்கு ஏந்தி வந்து அக்கறையாய் ஏற்றி வைத்தார் பனித்துளியின் உருவம் கொண்டு உயிர்பெற்ற வெளிச்சத் துளியின் ஒளியெங்கும் பரவி நிற்க உறைந்து நின்றேன் அழகினிலே மின் இணைப்பு விழித்தவுடன் விழித்துக் கொண்ட பேரொளியில் துளி வெளிச்சம் மறைந்துவிட மகிழ்ச்சி இல்லை மனதில் மட்டும்.

Continue Reading