..தினங்கள் தேவையில்லை

அ) கவிதைகள்

உள்ளத்துக் காதலை உணர்த்துவதற்கு காதலர் தினம் வரை காத்திருக்கத் தேவையில்லை தாய்மையின் பெருமையை போற்றுவதற்கு அன்னையர் தினம்தனை எதிர்நோக்கத் தேவையில்லை பெண்களின் மதிப்பை கொண்டாடுதற்கு மகளிர் தினம் வரை ஓய்ந்திருக்கத் தேவையில்லை ஒத்திவைத்தல் எதற்காக? ‘அடைக்குந்தாழ்’ எதற்காக? உள்ளத்து அன்போடும் உயர்வான பண்போடும் சீரிய கருத்தோடும் சிறந்த பணிவோடும் வாழ்ந்திருபோமேயானால் வாழும் நாளெல்லாம் அத்தகைய நாட்கள்தாம்

Continue Reading

சிட்டுக் குருவியின் தேடல் 20.12.2004

அ) கவிதைகள்

சிட்டுக் குருவிக்கு ஒருநாள் சிறகும் வளர்ந்தது கொஞ்சம் ‘பட்’டென அதனை விரித்து பறந்திட துடித்தது நெஞ்சம் மெத்தென சிறகுகள் விரிய உயர்ந்தது குருகதும் மெதுவாய் பறப்பது தன்னியல்பென்றே உணர்ந்திட மகிழ்ந்தது அழகாய் காடுகள் கடந்திட வேண்டும் கவின்பல கண்டிட வேண்டும் நாடுகள் சென்றிட வேண்டும் நன்மைகள் அறிந்திட வேண்டும் மேலோர் உரைத்திடக் கேட்டு மேன்மைகள் பெற்றிட வேண்டும் துவண்டிடும் மக்கள் கண்டு துயரங்கள் துடைத்திட வேண்டும் சிட்டுக் குருவிக்கு இங்கே சேர்ந்திடும் ஆசை கண்டீர் சிறகினை விரித்தே …

Continue Reading

தேடல் (24.7.2003)

அ) கவிதைகள்

உதிரத்தில் கலந்தென்னை ஊனுடம்பில் தேடுகின்றேன் இதயத்தின் உட்புகுந்து இடுக்கெல்லாம் தேடுகின்றேன் அறிவென்னும் ஒளிகொண்டு அகத்துள்ளும் தேடுகின்றேன் அன்பென்னும் விழிகொண்டு புறத்தினிலும் தேடுகின்றேன் உயிரென்பது தான் நானோ? உயிர் தங்கும் உடல் நானோ? அறிவென்பது தான் நானோ? அதைக்கடந்த நிலை நானோ? எது இங்கே நான் என்று என்னில் நான் தேடுகின்றேன் உடல் பிரிந்து உயிர் செல்லும் நாளில் தான் விளங்கிடுமோ?

Continue Reading