எறும்பு தத்துவம்

அ) கவிதைகள்

எறும்பு தத்துவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிங்களா? Ant Philosophy 1. Never Quit – Find a way or make it. 2. Think ahead – Ants think winter all summer 3. Think Positive – Ants think summer all winter 4. Do what all you can அதை உபயோகிச்சி ஒரு சின்ன கிறுக்கல்.. எறும்பு சொல்லும் பாடம் மேலேறி கீழிறங்கி முன்சென்று பின்சென்று ஏதோ ஒரு வழி …

Continue Reading

மனதின் கதை..

அ) கவிதைகள்

கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் அர்த்தம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …

Continue Reading

நானும் நிழலும்

அ) கவிதைகள்

நிழலை பிடிக்கவேண்டி நானதைத் தொடர்ந்திட்டேன் தொடர்ந்தே நானும் செல்ல நிழலும் விலகக் கொள்ள ஆட்டம் தொடங்கியது எனக்கும் நிழலுக்குமாய் இடமும் வலமுமாக முன்னும் பின்னுமாக மேலும் கீழுமாக விலகி நழுவியது அதனை நானும் கண்டேன் பல்வேறு வடிவினிலே நெடிதும் சிறியதுமாய் சில நொடி மாயமாய் பிடிக்க இயலவில்லை சோர்ந்தே நானமர்ந்தேன் அருகே நிழலும் கண்டு உணர்ந்தேன் அந்நொடியே நானும் நிழலும் ஒன்று இறைவனும் அப்படித்தானோ?

Continue Reading

அர்த்தங்கள் (21/11/02)

அ) கவிதைகள்

அன்பெனக்கு நீ அளிக்க அதையே நான் உனக்களித்தால் அதிலென்ன ஆனந்தம் உண்டு நீ கொடுக்கா பொழுதினிலும் நானுனக்கு தொடர்ந்தளித்தால் அதுவே உண்மை அன்பென்பது நலமாக நீ இருந்து நலமா என்றென்னைக் கேட்டால் அதிலென்ன ஆறுதல் இருக்கிறது நலமற்று நீ இருந்தும் நினைவாக என் நலனைக் கேட்டால் அதுவன்றோ பிரியம் என்பது இறந்து நீ சென்றபின்பு உன் நினைவை பிறர் மறந்தால் அதிலென்ன பெருமை இருக்கிறது இறவாத உன் நினைவு பிறர் மனதில் வீற்றிருந்தால் அதுதானே வாழ்தல் என்பது.

Continue Reading

பார்வைகள்..

அ) கவிதைகள்

நீலம் பச்சையென்று நித்தமொரு நிறம் பூட்டி நீந்தவிட்டேன் வார்த்தைகளை உருவில் மாற்றமுண்டு உட்பொருளோ மாறவில்லை உள்ளம் உயர்ந்திருக்க ஊணுடம்பு தடையுமில்லை.. உட்பொருள் சரிசமமே உண்மையிதை உணர்ந்திடுவாய்

Continue Reading

மனதின் கதை

அ) கவிதைகள்

கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் காரணம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …

Continue Reading

மனசாட்சி

அ) கவிதைகள்

இன்பமும் துன்பமும் உனக்குள்ளே சிரித்தலும் அழுதலும் அதனாலே நண்பனும் பகைவனும் உனக்குள்ளே நன்மையும் தீமையும் அதனாலே இகழ்ச்சியும் முயற்சியும் உனக்குள்ளே உயர்தலும் தாழ்தலும் அதனாலே நட்புக் கரம் கொடுப்பான் பகையாய் உயிர் எடுப்பான் இன்பத்தில் திளைக்க வைப்பான் துன்பத்தில் மூழ்க வைப்பான் வெறுமையில் வாட வைப்பான் முழுமையாய் சிரிக்க வைப்பான் உன்னுள் இருப்பது மனசாட்சி உயிர் ஓயும் நாள்வரை ஓயாது அதன் அரசாட்சி.

Continue Reading