Feb292008
உறங்கும் என் கவிதை
Filed under அ) கவிதைகள் by கீதா
ஓயாத வேலை
உன் பின்னே ஓட்டம்
விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்
காலை முதல் கனவு வரை
ஏதேதோ எண்ணங்கள்
குறிஞ்சியாய் பூக்கும்
ஓரிரு கவிதைகளும்
உயிர்பிக்க முடியாமல்
ஓரத்தில் உறங்கிப்போகும்
எங்கே தொலைந்துபோனேன்??
மீண்டும் கிடைப்பேனா??
எனக்கே எனக்கான
நேரமும் கிடைக்குமா?
இன்று கிடைத்தது
நான் தேடும் என் நேரம்
அப்பொழுதும்…
உள்ளுக்குள் உறங்கும்
கவிதையை எழுப்பாமல்..
வாய் குவித்து விரல் அசைத்து
சிரித்து சிணுங்கி பதுமைபோல்
உறங்கும் கவிதையான
உன்னை இரசிக்கின்றேன்
என்னவென்று சொல்வது??

1 J.Ameer Hasshanon 01 Mar 2008 at 12:25 am
Very Good …..
2 revathinarasimhanon 02 Mar 2008 at 1:42 am
மிக அருமை. இன்னும் 3 வருடங்கள் போய் குழந்தை பள்ளிக்குப் போவாள் அல்லவா. அப்போது தலைவாரிப் பூச்சூடும் கவிதை எழுதுவீர்கள்.அதுவரை அவள் உறங்க நீங்கள் ரசிக்கும் கணங்களே கவிதையாகும்.
3 பித்தன்on 03 Apr 2008 at 5:26 am
உயிருள்ள கவிதையாய் உங்கள் குழந்தை இருக்கையில்,வேறு கவிதைக்கு வேலையேது?
4 singaarakumaranon 08 Apr 2008 at 9:36 am
KUZHANTHTHAIKAL EVVALAVU VEEGAMAAKA VALARNTHTHU VITUKIRAARKAL!
5 கீதாon 22 Apr 2008 at 3:44 pm
நன்றி நண்பர்களே
குழந்தை செய்யும் எல்லாக் குறும்புமே கவிதை போலத்தான் இருக்கிறது.. ஆனாலும் சமயத்தில் கோவமும் வருகிறது.. என்ன செய்ய?
6 su.sivaon 22 May 2008 at 1:48 am
உறங்கும் உங்கள் கவிதை அழகாக சிரிக்கிறது
7 கீதாon 22 May 2008 at 9:01 am
வணக்கம் சிவா,
அன்புடன்
கீதா
8 T.PRASANNAKUMARon 03 Jun 2008 at 7:38 am
Dear Geetha,
Very Good,Super
9 கீதாon 03 Jun 2008 at 8:19 am
மிக்க நன்றி பிரசன்னகுமார்
அன்புடன்
கீதா
10 Kalaimathion 25 Jun 2008 at 1:50 am
kuzhanthaikal mattumthan thoongailum azhagu. athupolthann ungal kavithaium. urangum kavithaikal kooda azhakanavaithaan.
11 K.Selvarajon 05 Jul 2008 at 1:47 am
“விளையாடும் நேரமெல்லாம்
உன் வயதேதான் எனக்கும்”
Mika arumai.
12 rajasubramanianon 11 Jul 2008 at 6:53 am
சிவாஜி,பத்மினி நடித்த படம்.பெயர் மறந்துவிட்டது. பெண் குழந்தையை பத்மினி தாலட்டுவதாக வரும்காட்சியில் காலமிது,காலமிது, கண்ணுறங்கு மகளே என்ற பாட்டு மிகவும் பொருள் பொதிந்தது.உங்கள் கவிதை படித்ததும் எனக்கு அந்த பாட்டு தான் நினைவுக்கு வருகிறது.
குழந்தையை கவிதையாக உருவகம் செய்வது சிறப்பு.