Jun012008
பதின்ம வயது
Filed under அ) கவிதைகள் by கீதா
இருட்டின் வெளிச்சத்தில்
தோன்றும் விண்மீனாய்
பதின்ம வயதுகளில்
பூப்பூக்கும் கனவுகள்
அழகான அலைகடலில்
ஆர்ப்பரிக்கும் பேரலையாய்
பருவச் சுரப்பி வசம்
அதிரடி ஆட்சிமாற்றம்
எதிர்பாராத் தாக்குதலால்
ஏதேதோ மாற்றங்கள்
அன்பான உறவுகளும்
அன்னியமாய்த் தெரிந்தன
அருகிருக்கும் எல்லோரும்
அறிவிலியாய்த் தோன்றினர்
அக்கறையின் அரவணைப்பும்
அணைக்கட்டாய் உறுத்தின
அறிவுரைகள் செவிகட்கே
அத்தியெனக் கசந்தன
புரிதலே இல்லையென்று
புலம்பிட வைத்தன
பெரிசுகள் தொல்லையென்று
போர்க்கொடி எழுப்பின
விரும்பின வாழ்க்கைத்தேடி
வெகுளியாய் உலகில் ஓடி
தாக்கின நிஜத்தின் வலியில்
தடைகளின் தடயம் புரிய..
அதைக் கடந்து போராடி
அனுபவத்தால் ஆளாக
நான் பட்ட இன்னல்கள்
நாள்தோறும் எனக்குச் சொல்லும்
பேருண்மை என்னவென்று
பெரியோர் சொல் வேதமென்று
………..
யான் பெற்ற துன்பங்கள்
நீ பெறவே வேண்டாமென்று
கற்று வந்த பாடங்களைக்
கனிவுடனே எடுத்துச் சொன்னால்
தலைமுறை இடைவெளியென
தள்ளியிருக்கச் சொன்னாய்
பதின்ம வயதென்றாலே
பட்டால்தான் புரியுமோ?

1 Mukundanon 02 Jun 2008 at 3:43 am
எல்லா வயதினருமே இப்படித்தானோ?
இப்பொழுதெல்லாம் 10 வயது சிறுவர்கள் கூட நாம எதாவது சொன்னா அறுக்காத அப்படீங்கறாங்க. உலகம் வேகமா மாறி வருதோ?
முகுந்தன்
2 கீதாon 02 Jun 2008 at 10:55 pm
வணக்கம் முகுந்தன்
சின்னப்பசங்க ரொம்ப புத்திசாலிகளா/விவரமானவங்களா?? வளர்ந்துடறாங்க
வேறென்ன சொல்றது :):(
அன்புடன்
கீதா
3 சு.சிவாon 04 Jun 2008 at 10:46 am
குழந்தைகளுக்கும் பெற்றோர்க்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள். செற்களும் ஒப்பனை இல்லாமலேயே வசிகரிக்கிறது. நல்ல கவிதை.
4 கீதாon 05 Jun 2008 at 11:29 am
மிக்க நன்றி சிவா
அன்புடன்
கீதா
5 rajasubramanianon 08 Jul 2008 at 3:46 am
naan nalla thamizhil pinnoottam anuppa nainaithaal mudiyavillai.azhakiyil type adiththu copy pastepannaal varavillai.bloggil thamizhil adikka vazhi enna madam?
arumaiyaana kavithi. i am reminded of my school ancd college days when i did not listen to my father. So i am not surprised that my children have contrary views.
6 Mukundanon 09 Jul 2008 at 8:02 am
rajasubramanian please check this.
http://www.google.com/transliterate/indic/Tamil
7 agramamuthaon 09 Jul 2008 at 1:05 pm
கீதா அவர்களுக்கு தங்களின் வெண்பா எழுதும் ஆற்றலை இயன்றவரையில் இனிய தமிழ் வலையின் மூலம் அறிந்தேன். எனது வெண்பா எழுதலாம் வாங்க வலைத்தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டை நடத்திவருகிறேன். அதில் கலந்து கொள்ள தங்களை அழைக்கிறேன். நன்றி http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
8 shivajion 19 Jul 2008 at 9:22 am
su………………………per!!!
9 வலைக்குள் மழைon 03 Oct 2008 at 10:40 am
டீன் ஏஜ் பற்றி என்ன சொல்ல புரிஞ்சும் புரியாத வயசு ….அதுவும் இன்றைய சூழல்…
நிறைய தூண்டில்கள் நடுவே நீந்திடும் மீன்கள் ….இல்லை தூண்டில் புழுக்களா ?
நானும் ஒரு வலை பதிவு பண்ணிருக்கேன் பாருங்களேன்…
http://valaikkulmazhai.wordpress.com
கார்த்தி