Oct062006
பிரிதல்
Filed under அ) கவிதைகள் by கீதா
அஷ்டமியா? - ஆகாது
தேய்பிறையா? - கூடாது
இராப்பொழுதா? - வேண்டாமே
எத்தனையோக் காரணங்கள்
தேடித்தேடி எடுத்துவந்தேன்
ஏதோ சரியில்லையென
நித்தம் பயணம் ஒத்திவைத்தேன்
உண்மையிங்கு அதுவல்ல
நிஜத்தை நம் மனமறியும்
எல்லாம் இருந்தபோதும்
பயணிக்க மனம்தான் இல்லை
