கீதாவின் கிறுக்கல்கள் » அம்மா

அடுப்பங்கரை
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி

தென்ன மட்டய காயவச்சி

வெறக நல்லா பொளந்துவச்சி

அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி

எண்ணை ஊத்தி எரியவச்சி

மண் சட்டிய ஏத்தி வச்சி

ஊதி ஊதி இருமி இருமி

வறட்டி புகைய விரட்டி விரட்டி

கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி

அல்லும் பகலும் அனலில் வெந்து

அமுதமுதாய்ச் சமைச்சிடுவ..

ரேஷன் கடை வாசல் போயி

காலு வலிக்க கியூவில் நின்னு

மண்ணெண்ணை வாங்கி வந்து

பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி

கையெல்லாம் வலிக்க வலிக்க

பிடியை இழுத்து அடித்து அடித்து

அடைப்பை எடுத்து பத்தவச்சி

இருப்புச் சட்டிய மேல வச்சி

அடுப்புச் சத்தம் காதை அடைக்க

அடுக்களையில் அருகில் இருந்து

ருசி ருசியா சமைச்சிடுவ…

கேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,

தணல் அடுப்பு தந்தூரி

மின்சாரம் இயக்கும் அடுப்பு

சூரியனே சமைக்கும் அடுப்பு

அடுக்கடுக்கா அடுப்புகளும்

அடுத்த கட்டம் போயிருச்சி

அழகழகா மாறிடுச்சி

சட்டி பானை கூட்டங்கூட

நான் ஸ்டிக்கா மாறிடிச்சி

எத்தனையோ தெரிஞ்சிரிந்தும்

உன் திறமைய புதைச்சிவச்சி

உன் மகிழ்வ மறைச்சிவச்சி

அடுக்களையில் சமைச்சி சமைச்சி

அதுக்குள்ளே புழங்கி புழுங்கி

உன் உலகே சுருங்கிருச்சி

உன் உசுருகூட கருத்துரிச்சி..

அருமை அம்மாவுக்கு..
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

என்ன எழுதுவதம்மா

எதை எழுத நான்

அம்மா

என்றழைப்பதில்தான்

எத்தனை சுகமெனக்கு..

உன் புடவைத் தலைப்புக்குள்

ஒளிந்து கொண்டிருப்பேனே..

உன் மடிமீது தலைவைத்து

உறங்கிப் போவேனே..

உன் கையால் சோறுண்ண

நடுநிசியில் விழிப்பேனே..

வேலைக்கு நீ சென்றால்கூட

வாசலிலேயே படுத்திருப்பேன்

தெருமுனையில் உன்முகத்தை

காணவேண்டித் தவமிருப்பேன்..

பண்டிகையோ விடுமுறையோ

உனக்கெல்லாம் அடுப்படிதான்

உனக்கெது பிடித்தாலூம்

எனக்கு உண்ணத் தந்திடுவாய்

எனக்கொரு நோயென்றால்

ஊருக்கே தெரிந்துவிடும்

உனக்கொரு நோயென்றால்

உள்ளுக்குள் புதைத்திடுவாய்

உனக்கான துயரங்கள்

யாருக்கும் தெரிந்ததில்லை

நோயுற்ற காலத்திலும்

கடமையில் தவறியதில்லை

எனை விட்டு ஒருநாளும்

பிரிந்திருக்க மாட்டாயே

எப்படியம்மா தாங்கினாய்

பல்லாயிரம் மைல் பிரிவை..

உன்னருமை தெரியுமம்மா

பிள்ளையொன்று வந்தபின்பு

இன்னுமின்னும் புரியுதம்மா

அம்மாவாய் ஆகவேண்டி

ஈன்றால் மட்டும் போதுமா

தவம் செய்வேண்டுமம்மா

அம்மா எனும் வார்த்தைக்கு

வாழும் அர்த்தம் நீ

அம்மா.. அன்பின் உருவமே

கனிவூறும் கண்களே

உன் அறிவும் அருளும்

கருணையும் கம்பீரமும்

திடமும் தியாகமும்

சகிப்புத்தன்மையும் சாந்தமும்

பொறுப்பும் பொறுமையும்

மென்மையும் மேன்மையும்

எனக்கு வராதம்மா..

மெச்சுகிறேனம்மா…

வியக்கிறேன் உன்னைக்கண்டு..

அருமை அம்மா..

உன்னைக் கட்டிக்கொண்டு

உன்னருகில் தூங்கி

உன் முகத்தில் விழித்து

உன்னிடம் திட்டுவாங்கி

உன்னிடம் கோபித்து

உன்னுடன் விளையாடி

உன் செல்ல மகளாய்

உன்னுடனே இருக்கவேண்டும்

காத்திருக்கிறேனம்மா…

உன் மகளாய்…

முதலெழுத்து..
கருவான நாள்முதல்

கண்ணெனக் காத்தவள்

உருவாக்கி என்னையும்

உவகையோடு பார்த்தவள்

வலிகளை மட்டுமே

வாழ்நாளில் கண்டவள்

இத்தனைப் பெருமையும்

எந்தன் அன்னைக்கே

முதலெழுத்து சூட்டுதற்கு

தந்தை பெயர் மட்டும்

கேட்பது ஏன்?

..தினங்கள் தேவையில்லை
உள்ளத்துக் காதலை

உணர்த்துவதற்கு

காதலர் தினம் வரை

காத்திருக்கத் தேவையில்லை

தாய்மையின் பெருமையை

போற்றுவதற்கு

அன்னையர் தினம்தனை

எதிர்நோக்கத் தேவையில்லை

பெண்களின் மதிப்பை

கொண்டாடுதற்கு

மகளிர் தினம் வரை

ஓய்ந்திருக்கத் தேவையில்லை

ஒத்திவைத்தல் எதற்காக?

‘அடைக்குந்தாழ்’ எதற்காக?

உள்ளத்து அன்போடும்

உயர்வான பண்போடும்

சீரிய கருத்தோடும்

சிறந்த பணிவோடும்

வாழ்ந்திருபோமேயானால்

வாழும் நாளெல்லாம்

அத்தகைய நாட்கள்தாம்

அம்மா..
உன் மடியில் உறங்கி

நீ ஊட்ட உண்டு

உன் வசவில் சிணுங்கி

உடன் பிறப்போடலைந்து

உனை ஏய்த்து மகிழ்ந்து

சின்னவளாகவே இருந்திருந்தால்..

சுற்றங்களை விடுத்து

மணமொன்று புரிந்து

மறுதேசம் நுழைந்து

நிதமும் உனைத்தேடி

நினைவினில் நீராடி

ஏங்காது இருந்திருப்பேன்.

உயிர்ப்பு
விகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை

உயிர்ப்பு

இருண்ட உலகத்தில்

இருவராய் உருக்கொண்டோம்

எனக்கு நீதுணையாம்

உனக்கு நான்  துணையாம்

அன்னை உணவளிக்க

ஆனந்தம் பலகண்டோம்

அவள்முகம் கண்டிலோமவள்

அன்பினை  காண்கிறோம்

உயிரினில் பங்களித்தாள்

எனக்கும் உனக்குமாக

எத்துனை இன்பமிங்கே

அத்துனை உயர்ந்தவளுக்குள்

உலகம் சுருங்கிட்டதுவோ

உருவம் பெருகிட்டதுவோ

இங்கே  இருந்திடலாம்

என்றெண்ணிய எண்ணம்பொய்யாக

இன்னொரு உலகம் போக

நாளும் நேரமும்  நெருங்க

பயத்தின் மிகுதியில் நாமும்

பலவிதம் யோசிக்கின்றோம்

அங்கென்ன  இருக்குமென்றாய்

இவ்வுலகே சொர்கமென்றாய்

இங்குபலர் வாழ்ந்தாரென்றாய்

இவ்வுலகம்  திரும்பாரென்றாய்

வாழ்ந்தவர் சென்றதுண்டு

சென்றவர் வந்ததில்லை

இங்கேயெ  இருப்பேனென்றாய்

என்னாசைகூட அதுதான்

இங்கிருந்து சென்ற யாரும்

மீண்டிங்கு  வந்ததில்லை

அன்னாளும் வந்திட்டதுவே

கருவுலகை விட்டகன்றோமே

இதென்ன  பிரகாசவுலகம்

இத்துனை அழகாஇங்கு

அன்னையை கண்டோமிங்கு

அன்பினாய்  சொர்கமிதுதான்

இதனையா வேண்டமென்றோம்

இங்கா வரமறுத்தோம்

மகிழ்ச்சியின் மிகுதியில்

நாமும் கதறியழத்துவங்க

அன்னையின் அரவணைப்பு

சொர்கம்  சொர்கமிதுதான்.

இதில் கருவுலகை விட்டு பிரிவது இந்நில உலகை விட்டு பிரிவதாகவும் பொருள்  கொள்ளலாம்.

அன்னை – இறைவன் / பேரொளி

கதை எனக்கு மிகவும் பிடித்தது..அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்..  சிறுகதையாகவே அளிக்காமல் எனக்கு பழகிய, இயன்ற முறையில் அளித்தேன்.