கீதாவின் கிறுக்கல்கள் » நகைச்சுவை அனுபவம்

தலைக்கு மேல டண் டணா டண் டண்
மனசுக்குள்ள உட்கார்ந்து மணி அடிக்கலாம் ஆனா தலைக்கு மேல டமாரம் அடிக்கலாமா?? அடிக்கிறாங்களே..

நாங்க வசிக்கும் குடியிருப்பின் மேல் மாடிக்கு புதுசா ஒரு குடும்பம் வந்திருக்காங்க. அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை. இவர் பையன் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துட்டு போவானாம். அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லிங்க.. என் பிரச்சனையெல்லாம் வீடே கடகடக்க அவங்க கேட்கிற சவுண்ண்ண்டு மியூசிக்தாங்க.

இங்க எல்லாமே மரத்துனால செஞ்சதுதான் வீட்டின் தளம் உட்பட, அதனால மாடியில யாராவது சந்தோஷத்துல துள்ளி குதிச்சாக்கா நம்ம இதயமும் துள்ளிக் குதிக்குது. போதாக்குறைக்கு குழந்தை தூங்க ஆரம்பிச்சிட்டா கேக்கவே வேண்டாம், நம்ம வீட்டுக்குள்ள ஊசி விழும் அமைதியை (Pin Drop Silence?) நான் கடை பிடிக்க மேல “டண் டணா டண் டண்ணு”ண்ணு ஆரம்பிச்சிருவாங்க.  என் மண்டைக்குள்ளயும் வீட்டுக்குள்ளயும் எல்லாமே அதிர ஆரம்பிக்கும். எப்படித்தான் கஷ்டப்பட்டு காதை மூடிமூடி வச்சாலும் குழந்தையும் எழுந்து முழிச்சி முழிச்சி பார்க்கும் எங்கடா சத்தம் மட்டும்வருதேன்னு. இந்தக் கச்சேரி இராத்திரியும் நடக்கும் 11.30 மணியான சட்டுன்னு நிறுத்திருவாங்க.. (நம்ம மேல ரொம்ப கரிசனம்)

அப்படித்தான் ஒருநாள் மதியம் இந்த சவுண்ண்டு மியூசிக்குக்கு இடையே குழந்தையை தூங்க வச்சிட்டு யோசிச்சேன்.. என்னதான் செய்றது.. பேசாம வீட்டை காலி செய்துட்டு போயிரலாமன்னு யோசிக்கும்போதே என் அறிவு(?) என்னை இடித்துரைத்தது(?) பிரச்சனையைக் கண்டு ஏதும் தீர்வு யோசிக்காம இப்படி பயந்து ஓடினா எப்படி? அப்படின்னு. ம்ம் அதுவும் சரிதான். சரி என்ன செய்யலாம் மேனேஜ்மெண்டுக்கு ஒரு புகார் கொடுக்கலாமா.. இல்லை மேல் வீட்டுக்கு நேராவே போய் ஒரு குசலம் விசாரிச்சிட்டு அப்படியே அமுக்கி வாசிங்கனு சொல்லிட்டு வந்துரலாமா..ம்ம் இந்த இரண்டு யோசனையுமே எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது..

கொஞ்சம் நாள் முன்னாடி என் வீட்டுக்காரர் இங்க அமெரிக்காவுல நடந்த நிகழ்ச்சி ஒன்றை சொன்னார் அதாவது ஒரு மனுஷன் சுவருல(wall) ஆணி அடிச்சு ஓட்டை போட முடியலையின்னு தன்னோட துப்பாக்கி எடுத்து சுட்டு ஓட்டை போட்டிருக்கான் அவனோட போதாத காலம் அதுக்குப் பின்னாடி அவனோட மனைவி இருந்து இப்ப இறந்து போயிட்டாங்க…[செய்தி விபரம்] ஹ்ம்.  ஒவ்வொரு தடவை மேல் வீட்டுல ஆணி அடிக்கும் சத்தம் கேட்டாலே கொஞ்சம் உள்ளுக்குள்ள உதற ஆரம்பிச்சிருச்சி (அவரு கருப்ஸ் வேறயா கண்டிப்பா துப்பாக்கி வச்சிருப்பார் ஹ்ம்) இதுல நான் வேற புகார் கிகார் கொடுத்து “எந்த தையிரியம்..” அப்டின்னு சந்திரிமுகி ஸ்டைல்ல வந்துட்டார்னா.. அப்புறம் என் கதி.

அப்படியே யோசிச்சிட்டே திரும்பிப் பார்த்தேன் சன்னல் பக்கமா ரெண்டு உருவம் மாதிரி தெரிஞ்சது (அய்யோ யோசிச்சதுக்கேவா? ) உத்துப்பார்த்தா ரெண்டு ஸ்பானிஷ் ஆளுங்க ஒரு பெரிய பீரோ மாதிரியான ஒரு பெட்டியை எங்க வீட்டு பின்வாசல் முன்னாடி வச்சிருந்தாங்க. பார்க்குறதுக்கு ஒரு மேடை மாதிரியாவும் இருந்தது. மூளையில ஒரு மின்னல் இதேதூடா வம்பாப்போச்சு  நம்ம வீட்டு பின்பக்கமே புல்வெளியில உட்கார்ந்து ‘டண் டணா டண்’ வாசிக்க போராங்களோ? அய்யகோ அப்படின்னு யோசிச்சிட்டே இருக்கும்போது ஒரு வழியா அதை அவங்க மேல் பால்கனிக்கு கயிறு கட்டி தூக்கிட்டாங்க. ஒரு வழியா சமாதானமானப்புறம்தான் ரொம்ப நேரமா மூச்சை விடவே இல்லைன்னு உரைச்சுது அவசரமா ரெண்டு ஸ்கூப் காற்றை ஸ்வாசிச்சேன்.

பின்குறிப்பு: போன வாரம் அந்தம்மாவிடம் என் வீட்டுக்காரர் கேட்டே கேட்டு விட்டார் ‘என்ன நீங்க மியூசீக் பிராக்டீஸ் செய்யறிங்ளா? ‘ன்னு..’ மியூசிக்கா நாங்களா சேச்சே’ என்று சிரிச்சாங்களாம். அதிலிருந்து அதிரும் சத்தம் வருவதில்லை. ஹி ஹி தெரிஞ்சுகிட்ட வரைக்கும் சந்தோஷம் தான்.

பரீட்சை
படியென்று அன்னை சொல்கையிலே

தேர்வு நாள் நெருங்கி வருகையிலே

படித்தாயா என்று தோழி கேட்கையிலே

எனக்கு படிக்கத் தோணலை

இன்று தான் தேர்வு என்கையிலே

தேர்வு மையத்தில் நுழைகையிலே

பத்தே நிமிடங்கள் இருக்கையிலே

பலவும் படிக்கத் தோன்றுதே

பலநாள் படிக்காத பாடமெல்லாம்

பத்தே நொடியில் படித்ததென்ன

பத்தே நொடியில் படித்ததனை

மணிக்கணக்காய் எழுதி தீர்த்ததென்ன

படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்

பைத்தியம் தான் வாரோ?

மதிப்பெண் தான் தருவாரோ?

பாடத்தை மறந்துதான் போவாரோ??

101202