அருமை அம்மாவுக்கு..

அ) கவிதைகள்

தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
******

என்ன எழுதுவதம்மாஅம்மா நிவி
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை
அம்மா அப்பா
எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..
அம்மா நிவி அப்பா
அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகளாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகளாய்…

*********

21 thoughts on “அருமை அம்மாவுக்கு..”

  1. அன்னையர் தின வாழ்த்துக்கள் 😉

    கவிதையை பற்றி ஒன்னும் சொல்ல முடியல…வரி வரி உடன் படுகிறேன் 😉

  2. வாங்க லலிதா, கோபிநாத்

    🙂 வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

    அன்புடன்
    கீதா

  3. வாழ்த்துக்களுக்கு நன்றி சந்தோஷ்.. இப்பொழுது இங்கே காலைதான் அதனால நீங்க லேட்டா- சொல்லலை. 🙂

    என் மகளும் இப்பொழுதுதான் ‘ஹாப்பி பர்த்டே’ சொன்னாங்க [1 1/2 வயதுதான் ஆகிறது.. ஹாப்பி என்றால் உடனே பர்த்டே என்று நினைத்துக் கொள்கிறார் :)]

    நன்றி சந்தோஷ்

    அன்புடன்
    கீதா

  4. பெற்றோர் குறித்த கவிதைகள் எப்போதுமே மனதைப் பிசைகின்றன. உங்கள் கவிதை சற்று அதிகமாகவே கனக்கச் செய்கிறது, விழிகளையும் மனதையும்.

  5. வணக்கம் சேவியர்

    நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    கீதா

  6. என்ன எழுதுவதென்று தெரியவில்லை.நெஞ்சை உருக்கிவிட்டது உங்கள் இந்த கவிதை.

  7. வணக்கம் முகுந்தன்

    ‘என்ன எழுதுவதென்று தெரியவில்லை’ என்று கூறி எனக்குத் தெரியவேண்டியதை உணர்த்திவிட்டீர்கள். வேரன்ன வேண்டும். உங்கள் வருகைக்கும், மனமார்ந்த பாரட்டுக்கும் நன்றிகள் பல.

    மீண்டும் மீண்டும் வருகவென அன்புடன் அழைக்கிறேன்.

    கீதா

  8. சாதரனம்கவே பெற்றோரை விட்டும் சென்னையை விட்டும் பிரிய மனமில்லாத எனக்கு இது போன்ற கவிதைகள் படிக்க ஆசை . ஆனால் இது போன்ற கவிதைகளை வெளி நாட்டில் இருந்து படிக்கும் பொழுது இதயம் மிகவும் கனத்து விடுகிறது.

  9. உண்மைதான் முகுந்தன்.. இங்கிருக்கும்(வெளி நாட்டில்) பெரும்பாலானோரின் மனதும் இப்படித்தான் இருக்குமென்று நினைக்கிறேன்…

    நீங்கள் இந்தப் பாடல் கேட்டிருக்கிறீர்களா “உந்தன் தேசத்தின் குரல் …” எனக்கு பிடித்த நெஞ்சை உருக்கும் பாடல்.. கூடியவிரைவில் இங்கு பதிவிடுவேன்.

    அன்புடன்
    கீதா

  10. ஓடம் வன்டி ஏறும்
    வண்டியும் ஓடம் ஏறும்
    டெம்ப்லேட் சூப்பர்!

  11. I read this recently and found really good……

    Mother
    =====
    When you came into the world, she held you inher arms.
    You thanked her by wailing like a banshee.

    When you were 1 year old, she fed you and bathed you.
    You thanked her by crying all night long.

    When you were 2 years old, she taught you to walk.
    You thanked her by running away when she called.

    When you were 3 years old, she made all your meals with love.
    You thanked her by tossing your plate on the floor.

    When you were 4 years old, she gave you some crayons
    You thanked her by coloring the dining room table.

    When you were 5 years old, she dressed you for the holidays.
    You thanked her by plopping into the nearest pile of mud

    When you were 6 years old, she walked you to school.
    You thanked her by screaming, “I’M NOT GOING!”

    When you were 7 years old, she bought you a baseball.
    You thanked her by throwing it through the next-door-neighbor’s window.

    When you were 8 years old, she handed you an ice cream.
    You thanked her by dripping it all over her lap.

    When you were 9 years old, she paid for piano lessons.
    You thanked her by never even bothering to practice.

    When you were 10 years old, she drove you all day, from soccer to gymnastics to one birthday party after another.
    You thanked her by jumping out of the car and never looking back.

    When you were 11 years old, she took you and your friends to the movies.
    You thanked her by asking to sit in a different row.

    When you were 12 years old, she warned you not to watch certain TV shows.
    You thanked her by waiting until she left the house.

    Those teenage years
    ===============

    When you were 13, she suggested a haircut that was becoming.
    You thanked her by telling her she had no taste.

    When you were 14, she paid for a month away at summer camp.
    You thanked her by forgetting to write a single letter.

    When you were 15, she came home from work,looking for a hug.
    You thanked her by having your bedroom door locked.

    When you were 16, she taught you how to drive her car.
    You thanked her by taking it every chance you could.

    When you were 17, she was expecting an important call.
    You thanked her by being on the phone all night.

    When you were 18, she cried at your high school graduation.
    You thanked her by staying out partying until dawn.

    Growing old and gray
    ===============
    When you were 19, she paid for your college tution, drove you to campus,carried your bags.
    You thanked her by saying good-bye outside thedorm so you wouldn’t be embarrassed in front of your friends.

    When you were 20, she asked whether you were seeing anyone.
    You thanked her by saying, “It’s none of your business.”

    When you were 21, she suggested certain careers for your future.
    You thanked her by saying, “I don’t want to belike you.”

    When you were 22, she hugged you at your college graduation.
    You thanked her by asking whether she could pay for a trip to Europe.

    When you were 23, she gave you furniture for your first apartment.
    You thanked her by telling your friends it was ugly.

    When you were 24, she met your fiance and asked about your plans for the future.
    You thanked her by glaring and growling,”Muuhh-ther, please!”

    When you were 25, she helped to pay for your wedding, and she cried and told you how deeply she loved you.
    You thanked her by moving halfway across the country.

    When you were 30, she called with some advice on the baby.
    You thanked her by telling her, “Things are different now.”

    When you were 40, she called to remind you of a relative’s birthday.
    You thanked her by saying you were “really busy right now.”

    When you were 50, she fell ill and needed you to take care of her.
    You thanked her by reading about the burden parents become to their children.
    And then, one day, she quietly died. And everything you never did came crashing down like thunder.

    “Rock me baby, rock me all night long.”
    The hand who rocks the cradle…may rock theworld”.
    Let us take a moment of the time just to pay tribute/show appreciation
    to the person called MOM though some may not say it openly to their mother. There’s no substitute for her.
    Cherished every single moment.
    Though at times she may not be the best of friends, may not agree to our thoughts, she is still your mother!!! She will be there for you…to listen to your woes, your braggings, your frustations, etc.
    Ask yourself…..have you put aside enough time
    for her, to listen to her “blues” of working in the kitchen, her
    tiredness??? Be tactful, loving and still show her due respect though you mayhave a different view from hers. Once gone, only fond memories of the past and also regrets will be left.

    DON’T TAKE FOR GRANTED THE THINGS CLOSEST TO YOUR HEART.
    LOVE HER MORE THAN U LOVE YOURSELF.LIFE IS MEANINGLESS WITHOUT HER…

  12. வணக்கம் முகுந்தன்,

    மிக நன்றாய் இருக்கின்றது.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    இது தந்தையருக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன். தந்தைகளும் போற்றத்தக்கவர்களே.

    அன்புடன்
    கீதா

  13. உண்மை தான் கீதா.மிகவும் சரியாக சொன்னீர்கள்

  14. Ennai mugarndhu muthamittaval en AMMA .. ANNAIYAR dhina vazhthukal endru solvadhai vida KADAVUL DHINA vazhthukal endru nan solven.. Een theriyuma ennai padaithaval aval than EN AMMA… kadavul irukirara endru enaku theriyavillai aanal en AMMAvai kandhadhum unargiren…. HI GEETHA REALLLY I LIKE ALL UR words. indha varigalai paditha udan en kannil neer vazhindhadhu ennai ariyamal … thanks geetha thanks for ur words about AMMA(GOD)

  15. வணக்கம் பைரவிகண்ணன்

    உங்கள் பகிர்தலுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    அன்புடன்
    கீதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *