சங்கிலி பதிவுங்கிறாங்க… Tagங்குறாங்க.. எனக்கு ஒன்னும் புரியலை.. கொஞ்சம் நாளாவே தமிழ்மணத்துல உலவ சந்தர்ப்பம் கிடைக்கலை.. அதனால இருக்கும். நம்ம ஆர்த்தி இந்த tagging விளையாட்டுக்கு என்னையும் கூப்பிட்டாங்க. சரின்னு நானும் விளையாட வந்துட்டேன்.. எனக்கு பிடிச்ச நாலு(+நாலு) விஷயங்களை நாலு பேர்கிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஒரு இது.. எனக்கு பிடிச்ச நாலு மனிதர்கள் 1. அம்மா&அப்பா (பிரிக்கக்கூடாதுல்ல) 2. அண்ணா 3. என் கணவர் 4. சுற்றமும், நட்பும் எனக்கு பிடிச்ச நான் எழுதின கவிதைகள் நாலு …
Month: February 2006
படிக்கல்
மாணவனாய் இரு ஆசான் ஆவாய் ரசிகனாய் இரு கலைஞன் ஆவாய் வாசகனாய் இரு வாசிக்கப் படுவாய் மனிதனாய் இரு மகான் ஆவாய் அன்பாய் இரு உலகை ஆள்வாய்
தினமலரில் என் வலைப்பதிவு இடம்பெற்றுள்ளது
இன்றைய தினமலர் நாளிதழில் என்னுடைய “நினைவுகள் கனவுகள்” வலைத்தளம் இடம்பெற்றுள்ளது. தினமலருக்கும், என் பதிவு இடம்பெற முனைந்தவர்க்கும், இந்தத் தகவலை தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். அன்புடன் கீதா
..தினங்கள் தேவையில்லை
உள்ளத்துக் காதலை உணர்த்துவதற்கு காதலர் தினம் வரை காத்திருக்கத் தேவையில்லை தாய்மையின் பெருமையை போற்றுவதற்கு அன்னையர் தினம்தனை எதிர்நோக்கத் தேவையில்லை பெண்களின் மதிப்பை கொண்டாடுதற்கு மகளிர் தினம் வரை ஓய்ந்திருக்கத் தேவையில்லை ஒத்திவைத்தல் எதற்காக? ‘அடைக்குந்தாழ்’ எதற்காக? உள்ளத்து அன்போடும் உயர்வான பண்போடும் சீரிய கருத்தோடும் சிறந்த பணிவோடும் வாழ்ந்திருபோமேயானால் வாழும் நாளெல்லாம் அத்தகைய நாட்கள்தாம்