தலைப்பு – புத்தம் புதிய சிறப்புச் சிறுகதைகள் விகடன் பிரசுரம் வகை – சிறுகதைகள் சமீபத்துல படிச்ச புத்தகங்கள்-ல உடனடியா குறிப்பிடவேண்டியது இந்த சிறுகதைத் தொகுப்பு. பதினைந்து கதைகள் இருக்கு, ஒவ்வொன்னும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் எழுதினது. இதுல எனக்கு ரொம்பவும் பிடிச்சது இரா. முருகன் எழுதின இருபத்துநாலு பெருக்கல் ஏழு (24 x 7) . கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை வேலைன்னு எப்படி மக்களை சக்கையா பிழிஞ்சி எடுக்கிறாங்கன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்காரு. சீனியர் மேனேஜர் …
Month: April 2008
கண்ணாமூச்சி..
நீ வழக்கமாக ஒளியுமிடம் தெரியாதா எனக்கு?? ஆனாலும்… வீடு முழுதும் தேடி அலைவேன்.. ‘த்த்தோ நிமி’ என்று தலைக்காட்டி நீ சிரிக்கும் அழகில் கரைய.. oOo சும்மாவேனும் கையில் முகம்புதைத்து அழுதுகொண்டிருப்பேன் ‘அம்மா’ என்றணைத்தபடி என் முகம்நோக்கும் உன் அழகுவிழிகளின் அன்பொளியில் நனைய..
ஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)
புள்ள உசுர காக்கத்தானே தடுப்பு ஊசி போட வந்தேன்.. உசுரையே கொன்னுப்போட்டா எங்க போயி முறையிடுவேன்.. பூவப்போல சிரிச்ச புள்ள துவண்டு மேல சரிஞ்சதய்யா.. மழலை பேசும் வாயிலெல்லாம் நுரை ததும்பி வழிந்ததய்யா.. தத்தித்தத்தி வந்த புள்ள தடம் புரண்டு கிடக்குதய்யா.. பெத்த மனம் தாங்கல்லியே சொல்லிச்சொல்லி மாளலியே என்ன சாக்கு சொல்லப்போற யார குத்தம் சொல்லப்போற எம் புள்ள எனக்கு வேணும் எப்ப திருப்பித் தரப்போற.. புகைப்படம் : நன்றி தினத்தந்தி
சாலை விபத்து..
கண்ணாடிச் சில்லுகளுடன் சிதறிக் கிடப்பது அவனது கனவுகளும் அவர்களது வாழ்வின் அஸ்திவாரமும்…
அழகுக்குட்டி நிவிம்மா..
ஏ நிலவே.. வேடிக்கை போதும் என் செல்ல மகள் இப்பொழுது தான் கண்ணயர்ந்தாள் முகிலிடை மூழ்கிடு.. நின் ஒளிக்கரங்களால் வருடி வருடி அவளின் துயில் கலைத்து விடாதே ஆசை மிகின் தென்றலின் துணையொடு அவ்வப்பொழுது முகில் விலக்கி அவள் தூங்கும் அழகை இரசித்துக் கொண்டிரு என்னைப் போல்..
எல்லோரும் இப்படித்தானோ [2]
கொத்துக் கொத்தாய்ப் பூக்கள் சிதைக்கப்பட்ட இதழ்களுடன் சாக்லேட் கண்காட்சி…
எல்லோரும் இப்படித்தானா
மெய்யோ பொய்யோ அழகிய செடியின் இலைகள் நகம் தீண்டிய தழும்பேந்தி… **************** நண்பர்களே, நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்…. கையலம்பும் இடமருகில் கண்கவர் செடியொன்று மெய்யோ என்றறிந்திடவே இலையொன்றை ஸ்பரிசித்தேன் பாவம் அது…. பல்வேறு நகம் தீண்டி உடல்முழுதும் தழும்புகளாய்.. இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை. எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.
தலைக்கு மேல டண் டணா டண் டண்
மனசுக்குள்ள உட்கார்ந்து மணி அடிக்கலாம் ஆனா தலைக்கு மேல டமாரம் அடிக்கலாமா?? அடிக்கிறாங்களே.. நாங்க வசிக்கும் குடியிருப்பின் மேல் மாடிக்கு புதுசா ஒரு குடும்பம் வந்திருக்காங்க. அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை. இவர் பையன் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துட்டு போவானாம். அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லிங்க.. என் பிரச்சனையெல்லாம் வீடே கடகடக்க அவங்க கேட்கிற சவுண்ண்ண்டு மியூசிக்தாங்க. இங்க எல்லாமே மரத்துனால செஞ்சதுதான் வீட்டின் தளம் உட்பட, அதனால மாடியில யாராவது சந்தோஷத்துல …