பொய்முகம் காட்டிக் காட்டிப் பொழுதெல்லாம் உலவுகின்றார் அகத்தினை மறைக்கும் இவர்கள் அவனியில் அதிகம் உண்டு விழியினுள் வலியை மறைத்து விரிந்திடும் புன்னகை பூசி கானல்நீர் எனும் பொய்யில் கரைகிறார் பாவம் சிலபேர்! காரியம் நடத்திடக் குழைந்தும் கேட்டது முடிந்ததும் மறந்தும் பச்சோஞ்தியாய் நிறம்மாறி பாசாங்கு செய்வார் பலபேர்! இன்னோர் வகை சொல்வேன் இங்கு, இருப்பதிலே அதுதான் தீங்கு!! வேஷங்கள் நிலைத்திட ஒருமுகம்! வெறுப்பினைக் காட்டிட ஒருமுகம்!! பசப்புகள் செய்திட …
Month: November 2015
குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா?)
முகிலற்ற இரவின் நிசப்தத்தில் ஒன்றையொன்று தழுவிக் களித்தன – குளத்தில் அல்லி மலரும் வெள்ளி நிலவும். *** சாலையெங்கும் பூக்களின் சிதறல் அதிர்வேட்டுடன் ஆட்டம் பாட்டம், வீதியில் சவ ஊர்வலம். *** ஆளில்லாத சாலை ஓரம் ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம், நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள். *** குளிர்ந்த பின்னிரவின் கருமையில் ஆங்காங்கே முளைக்கும் உயிர்க் கொல்லிகள், சிகரெட் கங்குகள். *** மண்ணில் சரியும்போதும் – உயிர்களுக்காய் கடைசி உயிர்க்காற்றை விட்டுச் சென்றது, மனிதன் வெட்டிய …
விந்தை மனிதர்கள்
ஊருக்கு உபதேசம் சொல்வார் உனக்கும் எனக்கும் இல்லை என்பார். மனிதனை மதி என்பார், மனிதத்தை மிதித்து நிற்பார்! இருப்பவரெல்லாம் சமம் என்பார் இணங்காதவரைப் பிணம் என்பார்! பெண்ணுரிமை பேண் என்பார் பிடிக்காதவளைத் தேள் என்பார்! பிறர் தவற்றை ஓதிடுவார் தன் பிழையைக் கருதமாட்டார் மதிப்பில்லை எனச் சாடிடுவார் அதைத் தரவும் வேணும், அதை தான் மறப்பார்! பலவகை மனிதருள் இவர்களும் ஒருவகை இவர் அன்றும் இருந்தார், இனி என்றும் இருப்பார்!
ஒய்வு
அந்தி சாயும் நேரம் அழகு ஓவியமாய் வானம் சில்லெனும் தென்றல் காற்று சிலுசிலுக்கும் இலைகள் தூரத்து வானொலியில் தூதுவிடும் ஆசைகள் ஜானி தானே? ஒரு கோப்பைத் தேநீர்