இருட்டின் வெளிச்சத்தில் தோன்றும் விண்மீனாய் பதின் வயதுகளில் பூப்பூக்கும் கனவுகள் அழகான அலைகடலில் ஆர்ப்பரிக்கும் பேரலையாய் பருவச் சுரப்பி வசம் அதிரடி ஆட்சிமாற்றம் எதிர்பாராத் தாக்குதலால் ஏதேதோ மாற்றங்கள் அன்பான உறவுகளும் அன்னியமாய்த் தெரிந்தன அருகிருக்கும் எல்லோரும் அறிவிலியாய்த் தோன்றினர் அக்கறையின் அரவணைப்பும் அணைக்கட்டாய் உறுத்தின அறிவுரைகள் செவிகட்கே அத்தியெனக் கசந்தன புரிதலே இல்லையென்று புலம்பிட வைத்தன பெரிசுகள் தொல்லையென்று போர்க்கொடி எழுப்பின விரும்பின வாழ்க்கைத்தேடி வெகுளியாய் உலகில் ஓடி தாக்கின நிஜத்தின் வலியில் தடைகளின் தடயம் …