உதிரத்தை உரமாக்கும் உழவன்

ஆ) க(வி)தை

My Tamil poem on a given title for a contest. உதிரத்தை உரமாக்கும் உழவன் ——————————————————— உதிரத்தை உரமாக்கிடும் – உழவன் உழைப்புக்கு மதிப்பிங்குண்டோ? உழவையே தலையென்பவன் – உலகில் உழலும் நிலை அறிவாருண்டோ? வான் மழையோ பொய்த்துக் கொல்லும் வரை அணையோ தடுத்துக் கொள்ளும் வரவும் செலவான கதையை – இவன் வீட்டடுப்பு வாகாய்ச் சொல்லும். பாதி இடைத்தரகன் பதுக்கிக் கொண்டான் மீதி நிலக்கிழவன் பிடுங்கிச் சென்றான் பாங்காய்ப் பன்னாட்டு முதலாளியும் பெரிதாய்க் …

Continue Reading
ஆ) க(வி)தை

என் தமிழுணர்வை, தமிழ்க் கோபத்தை, தமிழ்ப் பாசத்தை, தமிழ் கர்வத்தை, தமிழ் வலியைச் சற்றே தள்ளிவிட்டுப் பார்க்கிறேன் எங்கும்.. தவிப்பது உயிர்கள்தாம் வலிப்பது நெஞ்சம்தாம் எரிவது வயிறுகள்தாம் தெரிவது துயரம்தாம்! ~கீதா ******

Continue Reading
ஆ) க(வி)தை

கடினமான நினைவுகள் காற்றுள்ள பந்துகள்! ஆழ் மனதுக்குள் ஆழ அழுத்திவிட்டு, ஆஹா வென்றேன்! என இறுமாந்து இருக்கும்முன் விர்ரென்று எழுந்து எங்கும் வியாப்பித்துக் கிடக்கின்றன! ~கீதா

Continue Reading
ஆ) க(வி)தை

மழை ஓய்ந்த விடியல்கள் —————————————— வெயில் உடுத்தாக் கருக்கல் துயில் எழும்பா மரங்கள் இலை அசையாக் காற்று இசை பரப்பாக் குயில்கள்… கிளை சொட்டும் துளிகள் துளி தாங்கிய புற்கள் மரம் சொரிந்த மலர்கள் மலர் படர்ந்த தடங்கள்… குருகு பறக்கும் வானம் மனதைக் கவ்வும் மௌனம் மேலும் கவிந்த ஞானம் ஏகாந்தம்… இனிமை மட்டுமல்ல! ~கீதா

Continue Reading
ஆ) க(வி)தை

என்னென்று சொல்வது நான்? ஏதென்று சொல்வது நான்? அனுதினமும் செய்திபார்த்து கலக்கமுற்றுக் கண்ணோக்கும் கண்மணிக் குழந்தைக்கு எதையென்று சொல்வது நான்? பட்டாய் மலர்ந்த பின்னே பரவிக் கமழும் மணத்தை, பிணத்தின் வாடை கொண்டே பேதையவள் அறியலாமா? சிட்டாய் வளர்ந்து சீராய்ச் சிரித்துச் சிறக்கும் முன்னே அமிலச் சிதறல் கொண்டே அனைத்தையும் பொசுக்கலாமா? என்னென்று சொல்வது நான்? பலாத்காரம் என்றால் யாதெனக் கேட்குமென் பிஞ்சுப் பெதும்பைக்கு எதையென்று சொல்வது நான்? ~கீதா

Continue Reading
ஆ) க(வி)தை

மண்ணில் வீழ்ந்த மிட்டாய்த் துண்டை வீணென ஒதுக்காமல் விட மனமில்லாமல் ஊதி ஊதி உண்ணும் குழந்தை போன்றது தான் – வேதனை கொடுத்தாலும் வினை பல புரிந்தாலும் விட்டு விட முடியாமல் வருந்தி அழுது மறக்க மறுத்து மீண்டும் ஒன்றையே நாடும் அன்பு கொண்ட மனதும்! ~கீதா

Continue Reading

பொய்முகம்

ஆ) க(வி)தை

    பொய்முகம் காட்டிக் காட்டிப் பொழுதெல்லாம் உலவுகின்றார் அகத்தினை மறைக்கும் இவர்கள் அவனியில் அதிகம் உண்டு   விழியினுள் வலியை மறைத்து விரிந்திடும் புன்னகை பூசி கானல்நீர் எனும் பொய்யில் கரைகிறார் பாவம் சிலபேர்!   காரியம் நடத்திடக் குழைந்தும் கேட்டது முடிந்ததும் மறந்தும் பச்சோஞ்தியாய் நிறம்மாறி பாசாங்கு செய்வார் பலபேர்!   இன்னோர் வகை சொல்வேன் இங்கு, இருப்பதிலே அதுதான் தீங்கு!!   வேஷங்கள் நிலைத்திட ஒருமுகம்! வெறுப்பினைக் காட்டிட ஒருமுகம்!! பசப்புகள் செய்திட …

Continue Reading

சொர்க்கம் போக டிக்கெட்

ஆ) க(வி)தை

மந்தமான மதியப் பொழுதில்.. மதியும் கொஞ்சம் மயங்கும் பொழுதில்.. இருக்கையில் அமர்ந்து கொண்டு இருவிழி மூடிக் கொண்டு சொர்க்கம் யாதென என்னுள் சொற்போர் நடத்த முனைந்தேன் சொர்க்கம் என்பதும் நிஜமோ சொற்களில் வாழ்ந்திடும் கனவோ பசியும் பிணியும் அங்குண்டோ? பாழும் பணமும் அங்குண்டோ? மண்ணுயிர் நீத்திடும் மக்கள் மாண்டதும் அங்கு செல்வாரோ? யாதது சொர்க்கம் என்று யாரிங்கு சொல்லிடுவாரோ? சட்டென சாலையில் ஏதோ சலசலப்பெழுவது கேட்டு வீதியில் எட்டிப் பார்த்தேன் வீதியில் மக்கள் வெள்ளம் வெறிச்சோடிக் கிடக்கும் …

Continue Reading