அகிலத்தை அழகாக்கி வைத்தாள் – அவள் உலகத்தை பழுதின்றி வைப்போம்!! சாதனைப் பெண்ணிங்கே சிலர்தான் – பலரின் சிறகிங்கே விரிக்க வழி செய்வோம்!! ஆணொருவன் கற்புநிலை பிழன்றால் – அதில் பெண்டிரின் பிழையெங்கே கண்டீர்?? பெண்ணுக்கே உரியதல்ல ஒழுக்கம் – அதை ஆணுக்கும் கற்பிக்கச் சொல்வீர்!! பொன்னான நல்லுலகு செய்வோம்!! – அது பெண்ணுக்கும் உகந்ததாய்ச் செய்வோம்!!
Month: November 2014
இரயில் பயணங்கள்
அதிகாலை நேரத்தில் அன்றலர்ந்த மலர்போலே அழகான நிகழ்வுகளில் அன்றாடப் பயணங்கள். காபியே பகலுணவாய், கட்டுச்சோறும் பையுமாய் இரயில் பிடிக்க ஓடயிலும் இரசிக்க வைக்கும் பூங்காற்று. கோவில் மணி ஓசைகளும் கோபுரத்துப் பறவைகளும் மணம் கமழும் மல்லிகையும் மனம் தவழும் நல்லிசையும் காலைக் கருக்கல், அதன் கவின் மிகு மாதிரியாய் கண் முன்னே விரியும் காட்சிகளின் சங்கமங்கள். விடியலின் சுறுசுறுப்போடும் சள-சள மனிதர்களோடும் வளைந்து ஓடிடும் இரயில்கள் பல சிந்தையைத் தூண்டிடும் நிஜங்கள். …
புத்தகம் வாசித்தேன் : கேள்விக்குறி , எழுதியவர்: எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்
குழந்தைகள் முதன்முதலில் பேசக் கற்றுக்கொண்டவுடன் தமது கேள்விக்கணைகளை பெற்றோர்களிடம் தான் தொடங்குகின்றனர். பெற்றோர்கள் தானே அவர்களின் முதல் ஆசிரியர்கள். “அப்பா ராத்திரியானா இந்த சூரியன் எங்கே போகுது?” “அம்மா வானம் ஏன்மா நீலமா இருக்கு?” “எல்லாருக்கும் ஒரே மாதிரி எலும்புதானே? அப்போ ஏன் வேற வேறமாதிரி இருக்காங்க? பெற்றோர்கள் சொல்லும் பதில்களில் இருந்து கிளைத்தெழும்புகின்றன மேலும் சில கேள்விகள். நம் வாழ்நாள் முழுதும் நாம் சில கேள்விகளை சுமந்து கொண்டே செல்கிறோம். சில கேள்விகளுக்கு விடை தேடுவோம், …
குழந்தைகளின் மௌனம்
குழந்தைகளின் கூச்சல் கூரையைப் பிளக்கிறது அமைதியாய் இரு மெல்லப் பேசு சிறிது வாயை மூடு என்று அதட்டியபடியே தொடர்கிறது என் பணி.. வீடே அமைதியாய் வெகுநேரம் நிசப்தமாய் ஓடியாடும் சப்தமில்லை வாய்ப்பேச்சும் கேட்கவில்லை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் என் பிள்ளை தாங்கவில்லை தாயெனக்கு ஏன் இப்படி இருக்கின்றாள் என் பிள்ளைக்கென்ன ஆயிற்று? காய்ச்சலோ? உடல்வலியோ? வாய் மூடி அமர்ந்தவளை வாரித் தூக்கி அணைக்கின்றேன் கொஞ்சமும் தாளமுடிவதில்லை குழந்தைகளின் மௌனத்தை.
இரவல் பொருட்கள்
இரவல் பொருளென்றால்? என்னென்று சொல்லிடவா? உபயோகம் முடிந்த பின்னே உரியவர்க்குத் திருப்ப வேண்டும் – இது புரியாத பலர் செயலால் பாதிக்கப் பட்டேன் நான் என்னுடைய பிறந்தநாளில் எனக்கான பரிசுக்காய் என்னிடமே பெறப்பட்ட நூறு எப்பொழுது திரும்பிடும் கூறு? நண்பரின் நண்பருக்காய் நண்பர் சொன்ன காரணத்தால் நான் செலுத்திய கட்டணம் நண்பா நீ தராததேன்? உன் நினைவுக்கது வராததேன்? அப்துல் கலாமின் “அக்கினிச் சிறகுகள்” புத்தம் புது புத்தகமாய்ப் புரட்டிப் பார்க்கும் முன்பே இரவல் வாங்கிச் …
கேள்வி பதில்
பதில்கள் வேண்டித்தானே கேள்விகள் எழுகின்றன? உண்டு இல்லை என்றுசொல்ல ஓயாத மௌனம் ஏனோ? இல்லை என்றே சொல்லிடலாம் இல்லாத பதிலை விட.
டாலர் சம்பளம்
டாலரிலே சம்பளமென்றால் டாலரில்தான் செலவும் இங்கே சொக்கவைக்கும் வீடென்றாலும் சொகுசாய் வாகனமென்றாலும் வாடகை, தவணை, வரி, வட்டி கொடுத்தால்தான் இங்கும் கிட்டும் பால் தயிர் வாங்கினாலே பாதி நூறு போயே போச்சு மளிகை வாங்கச் சென்றாலோ முழு நூறும் மாயமாச்சு கடனட்டை கண்ணீரு “காஸ்ட்கோ”க்கோ முன்னூறு ஆயர்கலையில் ஆறு பயில ஆகும்செலவோ ஆறு நூறு பார்ட்டி வைத்தால் பாதிச் செலவு பார்க்கப் போனால் மீதிச் செலவு இழுத்துப் பிடித்துச் சேர்த்துவைத்தால் இந்தியா ட்ரிப்புக்கு ஏகச் செலவு அந்தச் …