பாலம் கட்டும் பணி.. இரும்புக் கால்களினூடே நிலைத்த மனிதக் கால்கள் இரண்டுக்கும் பேதமில்லை நின்றால்தான் வாழும் நலிந்தால் அழிந்துவிடும்..
Month: March 2005
பார்வைகள்..
நீலம் பச்சையென்று நித்தமொரு நிறம் பூட்டி நீந்தவிட்டேன் வார்த்தைகளை உருவில் மாற்றமுண்டு உட்பொருளோ மாறவில்லை உள்ளம் உயர்ந்திருக்க ஊணுடம்பு தடையுமில்லை.. உட்பொருள் சரிசமமே உண்மையிதை உணர்ந்திடுவாய்
போதை அரக்கன்
அந்தோ எரிகிறதே அடிமனமும் பதறியதே பிஞ்சின் நிலையறிந்து பேதைமனம் துடிக்கிறதே பிஞ்சுகள் அறிந்திடாது தீதுயாது புரிந்திடாது நஞ்சினை கொடுத்தழிக்கும் வஞ்சகரை தெரிந்திடாது வந்தார் வாழவைப்போம் வினைகளினை தூரவைப்போம் பண்பாடு போற்றிடுவோம் சந்ததியைக் காத்திடுவோம் பிள்ளைகள் தேடிவரும் பெரும்பகையை நாமழிபோம்