சுட்டு எரிப்பதல்ல தீபம் சுடர்விட்டு எரிவதுதான் தீபம் இருளை அழிப்பதல்ல தீபம் இருளுக்கும் ஒளிதருவது தீபம் ஒளிர்ந்து ஓய்வதல்ல தீபம் ஒளி கொடுத்து உயர்வது தீபம் ஒன்றிலே ஒடுங்குவதல்ல தீபம் ஓராயிரம் ஒளி தருவது தீபம் நம் அனைவரது வாழ்விலும் தீபத்தின் ஒளி என்றும் ஒளிரட்டும். அதை நாம் இருளுக்கும் எடுத்துச் செல்வோம். ஒளி பரவட்டும். தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்.