சமீபத்தில் தான் இந்த நகைச்சுவை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வயிறு வலிக்கச் சிரித்தேன், வெகு காலத்திற்குப் பிறகு. மிகவும் அருமையான படைப்பு. அதிலிருந்து சில காணொளிகள் இங்கே 1. நாதஸ்வரம் என்றால் என்ன? ஆங்கிலத்தில் விளக்குகிறார் மௌலி 2. தவில் – இதை மௌலி ஆங்கிலத்தில் விளக்கும் காட்சி 3. மௌலியின் ஆங்கில விளக்கதைக் கேட்டவரின் நிலை
Category: ஊ) நான் ரசிப்பவை
திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே
இந்தப் பாட்டுல அப்படி என்னதான் இருக்கு? எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா? அழகான கவித்துவமான வரிகளா? என்னன்னு தெரியலை ஆனா எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வாலியின் வரிகள் ஜன்னலின் வழி வந்து விழந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உறசிட கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகை பாட …
திரையிசையில் கவிதை
“வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒருநாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..” -கவிப்பேரரசு வைரமுத்து இது கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல் என்று நினைக்கிறேன் (தவறென்றால் தெரிவிக்கவும்..) எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் முதன்மையானது இந்தப் பாடல் அதிலும் இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு,விண்மீன்களுடன் விளையாடியபடி அவ்வப்பொழுது உயரத்தில் வெளிச்சப்புள்ளியாக பறந்துபோகும் வானவூர்தியை பார்த்துக்கொண்டிருப்பதில் …