போகி மேளம்

அ) கவிதைகள்

  அலாரம்ம்ம்ம்ம்ம்ம்ம் அடிக்கும் முன்னே எழுந்து ஓடி அரை இருளில் வழியைத் தேடி பங்காளிகளின் கதவைத் தட்டி படை சேர்த்துக் கிளம்பிடுவோம் நடுநடுங்கும் விடியாப் பொழுதில் நடுரோட்டில் போகிக் கொளுத்த.   வாரக்கணக்கா குப்பை சேர்த்து வாசலிலே குவித்துப் போட்டு வானளாவத் தீயத் தூண்டி வாகாய் அதில் சூடு காட்டி ஈர்க்குச்சியை எடுத்து வெட்டி இருமுனையில் தாரை ஒட்டி பதம் பார்த்து அடிக்கையிலே பறையை மிஞ்சும் எங்கள் மேளம்!   அதிகாலைக் குளிரில் அங்கே அனல் பறக்கும் …

Continue Reading
அ) கவிதைகள்

கார்ப்பரேட் பெருச்சாளியின் கைப்பாவைதானே நாம்! அன்று.. கரித்தூளைக் கைப்பற்றி, பற்பசையைத் திணித்தார்கள்! செக்கு நெய்யைச் சீரழித்து சுத்தீகரித்துத் தந்தார்கள்! வரகும் கம்பும் வீணென்று வரட்டு ஓட்ஸ் கொடுத்தார்கள்! கருப்பட்டியைக் கரையவிட்டு கட்டிச் சர்க்கரை வளர்த்தார்கள்! இன்று காராம் பசுவைக் கண்டமாக்க காளை காவு கேட்கிறார்கள்!   அடிமடியில் கைவைக்கும் கார்ப்பரேட் கொழுப்பைத் தடுப்போமா? அன்றி, அண்டை மாட்டினர் கடைவிரிக்க காங்கேயம் காவு கொடுப்போமா?

Continue Reading

ரகசியங்கள்..

அ) கவிதைகள்

அதோ… அந்தப் பூட்டாத அலமாரியில்தான் ஒளிந்து கொண்டிருக்கின்றன எனக்கே எனக்கான என் ரகசியங்கள்.. கதவின் இடுக்குகளில் கைப்பிடியின் குழல்களில் புடவை மடிப்புகளின் இடையினில் அழுக்குத் துணிகளின் வாடையில் ஆங்காங்கே எட்டிப் பார்த்தபடி எனக்காய் காத்திருக்கின்றன. கதவடைத்த கும்மிருட்டிலும் கண்ணயர்ந்து உறங்காமல் தொட்டுத் துழாவியபடி என்னைத் தேடித் திரிகின்றன வேறு எவரிடமும் மாட்டாமல் எப்படியோ ஒளிந்து கொள்கின்றன.. தாய்முகம் தேடும் பிள்ளைபோல் தவழ்ந்து தேய்கின்றன பாவம் அவைகள்..   இதோ.. வந்துவிட்டேன்.. இரைச்சலான உலகினை மறந்து ஏகாந்தத்தின் இனிமையில் …

Continue Reading

குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா?)

அ) கவிதைகள்

  முகிலற்ற இரவின் நிசப்தத்தில் ஒன்றையொன்று தழுவிக் களித்தன – குளத்தில் அல்லி மலரும் வெள்ளி நிலவும். *** சாலையெங்கும் பூக்களின் சிதறல் அதிர்வேட்டுடன் ஆட்டம் பாட்டம், வீதியில் சவ ஊர்வலம். *** ஆளில்லாத சாலை ஓரம் ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம், நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள். *** குளிர்ந்த பின்னிரவின் கருமையில் ஆங்காங்கே முளைக்கும் உயிர்க் கொல்லிகள், சிகரெட் கங்குகள். *** மண்ணில் சரியும்போதும் – உயிர்களுக்காய் கடைசி உயிர்க்காற்றை விட்டுச் சென்றது, மனிதன் வெட்டிய …

Continue Reading

விந்தை மனிதர்கள்

அ) கவிதைகள்

ஊருக்கு உபதேசம் சொல்வார் உனக்கும் எனக்கும் இல்லை என்பார். மனிதனை மதி என்பார், மனிதத்தை மிதித்து நிற்பார்! இருப்பவரெல்லாம் சமம் என்பார் இணங்காதவரைப் பிணம் என்பார்! பெண்ணுரிமை பேண் என்பார் பிடிக்காதவளைத் தேள் என்பார்! பிறர் தவற்றை ஓதிடுவார் தன் பிழையைக் கருதமாட்டார் மதிப்பில்லை எனச் சாடிடுவார் அதைத் தரவும் வேணும், அதை தான் மறப்பார்! பலவகை மனிதருள் இவர்களும் ஒருவகை இவர் அன்றும் இருந்தார், இனி என்றும் இருப்பார்!

Continue Reading

ஒய்வு

அ) கவிதைகள்

அந்தி சாயும் நேரம் அழகு ஓவியமாய் வானம் சில்லெனும் தென்றல் காற்று சிலுசிலுக்கும் இலைகள் தூரத்து வானொலியில் தூதுவிடும் ஆசைகள் ஜானி தானே? ஒரு கோப்பைத் தேநீர்

Continue Reading

பாதுகாப்போம் பிள்ளைகளை

அ) கவிதைகள்

பால்முகம் மாறும் முன்னே பாலியல் தொந்தரவாம். பிஞ்சென்றும் அறிவாரோ பிணந்தின்னியின் கீழோர்? நெஞ்சல்ல நஞ்சுடையோர், நரம்பெங்கும் புரையுடையோர், வாய்ப்பொன்று வாய்த்திட்டால் வெறியாடும் வாலினத்தோர் நன்மகனாய் வேடமிட்டு நயங்காட்டும் இழிமனத்தோர். சொந்தமாய் பந்தமாய் சுற்றமாய்ச் சூழலாய் எழிலாக ஒளிந்திருப்பர் எங்கெங்கும் இவர் இருப்பர். வேலி போட வழியுமில்லை வேலிதானா? தெரியவில்லை சொல்வதற்கு ஏதுமில்லை செய்வதற்கோ பஞ்சமில்லை எச்சரிக்கை! எச்சரிக்கை!! எக்கணமும் எச்சரிக்கை!! பிஞ்சுதான் பரவாயில்லை, வஞ்சமெது எடுத்துரைப்போம்! தொடுதலெது தொல்லையெது தொடரும்முன் தெரியவைப்போம்! நயவர் எவர்? கயவர் எவர்? …

Continue Reading

பெண்

அ) கவிதைகள்

அகிலத்தை அழகாக்கி வைத்தாள் – அவள் உலகத்தை பழுதின்றி வைப்போம்!! சாதனைப் பெண்ணிங்கே சிலர்தான் – பலரின் சிறகிங்கே விரிக்க வழி செய்வோம்!! ஆணொருவன் கற்புநிலை பிழன்றால் – அதில் பெண்டிரின் பிழையெங்கே கண்டீர்?? பெண்ணுக்கே உரியதல்ல ஒழுக்கம் – அதை ஆணுக்கும் கற்பிக்கச் சொல்வீர்!! பொன்னான நல்லுலகு செய்வோம்!! – அது பெண்ணுக்கும் உகந்ததாய்ச் செய்வோம்!!

Continue Reading

இரயில் பயணங்கள்

அ) கவிதைகள்

    அதிகாலை நேரத்தில் அன்றலர்ந்த மலர்போலே அழகான நிகழ்வுகளில் அன்றாடப்  பயணங்கள். காபியே பகலுணவாய், கட்டுச்சோறும் பையுமாய் இரயில் பிடிக்க ஓடயிலும் இரசிக்க வைக்கும் பூங்காற்று.   கோவில் மணி ஓசைகளும் கோபுரத்துப் பறவைகளும் மணம் கமழும் மல்லிகையும் மனம் தவழும் நல்லிசையும் காலைக் கருக்கல், அதன் கவின் மிகு மாதிரியாய் கண் முன்னே விரியும் காட்சிகளின் சங்கமங்கள்.   விடியலின் சுறுசுறுப்போடும் சள-சள மனிதர்களோடும் வளைந்து ஓடிடும் இரயில்கள் பல சிந்தையைத் தூண்டிடும் நிஜங்கள். …

Continue Reading