இந்தப் பாட்டுல அப்படி என்னதான் இருக்கு? எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா? அழகான கவித்துவமான வரிகளா? என்னன்னு தெரியலை ஆனா எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வாலியின் வரிகள் ஜன்னலின் வழி வந்து விழந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உறசிட கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகை பாட …
Month: May 2008
அடுப்பங்கரை
சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி தென்ன மட்டய காயவச்சி வெறக நல்லா பொளந்துவச்சி அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி எண்ணை ஊத்தி எரியவச்சி மண் சட்டிய ஏத்தி வச்சி ஊதி ஊதி இருமி இருமி வறட்டி புகைய விரட்டி விரட்டி கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி அல்லும் பகலும் அனலில் வெந்து அமுதமுதாய்ச் சமைச்சிடுவ.. ரேஷன் கடை வாசல் போயி காலு வலிக்க கியூவில் நின்னு மண்ணெண்ணை வாங்கி வந்து பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி கையெல்லாம் வலிக்க வலிக்க …
மலர்வளையம்
நினைவஞ்சலி எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது எதிர்பாராக் கொடுமைகள் கண்ணெதிரே கண்டவுயிர் கணப்பொழுதில் காலனோடு விழியோரம் தொக்கிநிற்கும் விழிநீரும் உணர்த்திச்செல்லும் வேரினை பிடுங்கிச் சென்ற வேதனை உரக்கச் சொல்லும் வலிகொண்ட மனதிற்கு மருந்தென்ன? மாற்றென்ன? விழிமூடிக் கிடந்தாலும் விட்டத்தை முறைத்தாலும் வார்த்தைகள் விலகிநிற்கும் வலியினை உணர்த்துதற்கு வருடங்கள் உருண்டாலும் வலியின் வாசம் மட்டும் விழிக்கருவில் வடு போல விலகாமல் என்றென்றும்..
அருமை அம்மாவுக்கு..
தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். ****** என்ன எழுதுவதம்மா எதை எழுத நான் அம்மா என்றழைப்பதில்தான் எத்தனை சுகமெனக்கு.. உன் புடவைத் தலைப்புக்குள் ஒளிந்து கொண்டிருப்பேனே.. உன் மடிமீது தலைவைத்து உறங்கிப் போவேனே.. உன் கையால் சோறுண்ண நடுநிசியில் விழிப்பேனே.. வேலைக்கு நீ சென்றால்கூட வாசலிலேயே படுத்திருப்பேன் தெருமுனையில் உன்முகத்தை காணவேண்டித் தவமிருப்பேன்.. பண்டிகையோ விடுமுறையோ உனக்கெல்லாம் அடுப்படிதான் உனக்கெது பிடித்தாலூம் எனக்கு உண்ணத் தந்திடுவாய் எனக்கொரு நோயென்றால் ஊருக்கே தெரிந்துவிடும் உனக்கொரு நோயென்றால் …
புத்தகம் வாசித்தேன் – மகாபாரதம் – பாண்டவர்கள் தருமசீலர்களா?
தலைப்பு : மகாபாரதம் (எ) வியாசர் விருந்து எழுதியவர் : ராஜாஜி (எ) சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி வானதி பதிப்பகம் ராஜாஜி அவர்கள் எழுதின மகாபாரதம் (எ) வியாசர் விருந்து படிச்சேன். விறுவிறுன்னு என்ன ஒரு நடை.. என்ன ஒரு விவரிப்பு.. காட்சியெல்லாம் கண்முன்னே விரியுது.. எளிமையான தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்ட ஓர் அற்புதமான படைப்பு. புத்தகத்தை படிச்சு முடிச்சதுமே எனக்கு தோன்றின சில கருத்துக்கள் இங்கே.. பாண்டவர்கள் ஒன்றும் அவ்வளவு தரும சீலர்கள் இல்லை …
திரையிசையில் கவிதை
“வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும் ஒருநாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்..” -கவிப்பேரரசு வைரமுத்து இது கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் திரைப்பாடல் என்று நினைக்கிறேன் (தவறென்றால் தெரிவிக்கவும்..) எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் முதன்மையானது இந்தப் பாடல் அதிலும் இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று அவ்வப்பொழுது நினைப்பதுண்டு. மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு,விண்மீன்களுடன் விளையாடியபடி அவ்வப்பொழுது உயரத்தில் வெளிச்சப்புள்ளியாக பறந்துபோகும் வானவூர்தியை பார்த்துக்கொண்டிருப்பதில் …
கோக்
அனுதினமும் உறிஞ்சியதால் காலியானது நிலத்தடி நீர் [இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது. என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]
கூகுளாண்டவனே சரணம் இண்டர்நெட்டே
சமையல் குறிப்புக்கு சன்னதி நீ சமயத்தில் பாதைக்கு வழிகாட்டி நீ புரியாத வார்த்தைக்கு அகராதி நீ தெரியாத விபரங்கள் தெரிவிப்பாய் நீ அறியாத ஊருக்கு அட்லசும் நீ படிக்காத பாஷைக்கு பண்டிதனும் நீ தளங்களின் புள்ளியியல் நிபுணரும் நீ மறுமொழி மயக்கத்தின் மாயமும் நீ உலகிய நட்பினுக்கு வாசலும் நீ வாசல்வெளி நட்புக்கு தாழ்ப்பாளும் நீ காதலுக்கு தூதாகச் செல்பவனும் நீ சாதலுக்கும் பலவழிகள் சொல்பவனும் நீ அயல்நாட்டில் அன்னைமுகம் காட்டுபவன் நீ அருகேயே இருப்போரை மறைப்பவனும் …
தொடரும் தடுப்பூசி மரணங்கள்
திருவள்ளூர் 4 திண்டுக்கல் 1 உத்திரபிரதேசம் 2 தர்மபுரி 1 நெல்லை 1 காட்டுமன்னார்கோயில் 1 முடிந்ததா? தொடருமா? பிஞ்சு உயிரென்ன துச்சமா உமக்கு உம்வீட்டில் நிகழ்ந்தால் உச்சுகொட்டி நிற்பீரா? கெஞ்சமாட்டீர் கதறமாட்டீர் தடுப்பூசி மருந்தினை தடைசெய்யமாட்டீர் ஏன் தாமதம்?? போனது யாரோதானே பிரியாவும் பூஜாவும் உமக்கென்ன வேண்டும்? அரசன் மகளென்ன ஆண்டி மகளென்ன உயிர் ஒன்றுதானே பாசம் ஒன்றுதானே வலி ஒன்றுதானே புரியாதா உமக்கு? தடுப்பூசி எதற்காக? நோய் தடுக்கத்தானே? ஊசியே உயிர் குடித்தால் தவறெங்கே …