சிப்பியென இமை மூடி செவ்விதழில் முகை சூடி சிகை வருடும் பிறை நுதலில் சிந்தை கவர் கண்ணே நான் சூல்கொண்ட நன்முத்தே என் இதழ்சூடும் புன்னகையே செப்புகிறேன் என் வாக்கை சிந்தையில் சேர் கண்ணே மூவிரண்டு வயதில் நீ முன்னூறு கதை படிப்பாய் நாலிரண்டு வயதில் நீ நன்மை பல கற்றிடுவாய் ஏழிரண்டு வயதில் நீ ஏற்றங்கள் பெற்றிடுவாய் எண்ணிரண்டு வயதில் நீ எழில் நிலவை எட்டிடுவாய் கண்ணிரண்டு துணைகொண்டு கசடற நீ உயர்ந்திடுவாய் எம்மிரண்டு உயிர் …