குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா?)

அ) கவிதைகள்

602e3140dc5949bbe422d08ecad639d5

 

முகிலற்ற இரவின் நிசப்தத்தில்

ஒன்றையொன்று தழுவிக் களித்தன – குளத்தில்

அல்லி மலரும் வெள்ளி நிலவும்.

***
சாலையெங்கும் பூக்களின் சிதறல்

அதிர்வேட்டுடன் ஆட்டம் பாட்டம்,

வீதியில் சவ ஊர்வலம்.

***

ஆளில்லாத சாலை ஓரம்

ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம்,

நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள்.

***

குளிர்ந்த பின்னிரவின் கருமையில்

ஆங்காங்கே முளைக்கும் உயிர்க் கொல்லிகள்,

சிகரெட் கங்குகள்.

***

மண்ணில் சரியும்போதும் – உயிர்களுக்காய்

கடைசி உயிர்க்காற்றை விட்டுச் சென்றது,

மனிதன் வெட்டிய மரம்.

1 thought on “குறுங்கவிதை (அ) ஹைக்கூ(வா?)”

 1. வணக்கம்
  உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.

  ஆளில்லாத சாலை ஓரம்

  ஆயிரம் பிம்பத் துண்டுகளாய் ஆகாயம்,

  நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள்.

  இது மிகவும் பிடித்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *