மனதின் கதை

அ) கவிதைகள்

கையில் கிடைக்காத மனதின் கதை கேட்டேன் கற்பனை ஆனாலும் கதையில் சுவையுண்டு பிரம்மன் படைத்திட்டான் புவியில் மனித இனம் மறைந்தே இருப்பதுதான் மனதின் பெருமையென்று தேடி அலைந்திட்டான் அவனின் மனதுக்கிடம் புவியில் புதைத்திட்டால் குடைந்தே எடுத்திடுவான் வெளியில் மறைத்திட்டால் பறந்தே பிடித்திடுவான் எவ்விதம் வைப்பதென யோசனை மிகக்கொண்டான் கண்டான் சிறந்த இடம் மனிதன் உடலே அ·து எங்கும் தேடும் மனிதன் தன்னுள் தேட மாட்டான் தேடத் துவங்கும் அந்நாள் வாழ்வின் காரணம் புரியும் கதையும் முடிந்தது அங்கே …

Continue Reading

உயிர்ப்பு

அ) கவிதைகள்

விகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை உயிர்ப்பு இருண்ட உலகத்தில் இருவராய் உருக்கொண்டோம் எனக்கு நீதுணையாம் உனக்கு நான் துணையாம் அன்னை உணவளிக்க ஆனந்தம் பலகண்டோம் அவள்முகம் கண்டிலோமவள் அன்பினை காண்கிறோம் உயிரினில் பங்களித்தாள் எனக்கும் உனக்குமாக எத்துனை இன்பமிங்கே அத்துனை உயர்ந்தவளுக்குள் உலகம் சுருங்கிட்டதுவோ உருவம் பெருகிட்டதுவோ இங்கே இருந்திடலாம் என்றெண்ணிய எண்ணம்பொய்யாக இன்னொரு உலகம் போக நாளும் நேரமும் நெருங்க பயத்தின் மிகுதியில் நாமும் பலவிதம் யோசிக்கின்றோம் அங்கென்ன இருக்குமென்றாய் இவ்வுலகே …

Continue Reading

மனசாட்சி

அ) கவிதைகள்

இன்பமும் துன்பமும் உனக்குள்ளே சிரித்தலும் அழுதலும் அதனாலே நண்பனும் பகைவனும் உனக்குள்ளே நன்மையும் தீமையும் அதனாலே இகழ்ச்சியும் முயற்சியும் உனக்குள்ளே உயர்தலும் தாழ்தலும் அதனாலே நட்புக் கரம் கொடுப்பான் பகையாய் உயிர் எடுப்பான் இன்பத்தில் திளைக்க வைப்பான் துன்பத்தில் மூழ்க வைப்பான் வெறுமையில் வாட வைப்பான் முழுமையாய் சிரிக்க வைப்பான் உன்னுள் இருப்பது மனசாட்சி உயிர் ஓயும் நாள்வரை ஓயாது அதன் அரசாட்சி.

Continue Reading

ஒன்றுமில்லை

அ) கவிதைகள்

ஆம் நண்பா.. மறைந்த உன் நினைவுகளைத் தவிற வேறொன்றும் இல்லை விபத்தில் சிக்கியதும் வலியில் வாடியதும் நீ மட்டும் இல்லை.. என் மனதும் தான் வேதனைப் பூக்களை வார்த்தையில் கோர்த்தேன் மனதினுள் பூட்டிவைத்தேன் அது உனக்கேயானது தவழ்ந்து வருவது மாலையின் வாசமான உன் நினைவுகள் மட்டுமே வேறொன்றும் இல்லை..

Continue Reading