மௌலியின் “ஃப்ளைட் 172”

ஊ) நான் ரசிப்பவை

சமீபத்தில் தான் இந்த நகைச்சுவை நாடகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வயிறு வலிக்கச் சிரித்தேன், வெகு காலத்திற்குப் பிறகு. மிகவும் அருமையான படைப்பு. அதிலிருந்து சில காணொளிகள் இங்கே 1. நாதஸ்வரம் என்றால் என்ன? ஆங்கிலத்தில் விளக்குகிறார் மௌலி 2. தவில் – இதை மௌலி ஆங்கிலத்தில் விளக்கும் காட்சி 3. மௌலியின் ஆங்கில விளக்கதைக் கேட்டவரின் நிலை

Continue Reading

நினைவாஞ்சலி

அ) கவிதைகள்

எனது அருமை அக்கா எப்படி முடிந்தது உன்னால் எமை விட்டுச் செல்ல எப்படி முடிந்தது உன்னால் தீபாவளித் திருநாள் இன்று தீபா வலியென்றே உணர்ந்தேன் அலைபேசி தனைக் கொண்டு அனைவர்க்கும் வாழ்த்துரைத்தேன் உன் எண்ணைக் கடக்குந்தோறும் உள்ளமெல்லாம் பதறுதம்மா… பொத்திப் பொத்தித் தாளாமல் பொங்கி வரும் சோகத்தை இத்தனை நாள் பேசாத என் கவிதை சொல்லிடுமா? மருதாணிச் சிவப்பை நீ மகிழ்ந்தெனக்குக் காட்டும்முன்னே காலன் கொண்டு சென்றானே காலம் பார்த்து வந்தானோ? நீ இல்லை எனும் நினைவே …

Continue Reading

குழந்தைகளின் விளையாட்டு

உ) அனுபவம் எழுதுது

முன்னொருகாலத்தில்(??) எங்கண்ணன் வாரந்தவறாம நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய்வருவாரு.. ரொம்ப பக்தியெல்லாம் இல்லை..அங்க கொடுக்கிற வெண்பொங்கலை சாப்பிடத்தான். சுடச் சுடப் பொங்கல் கொடுப்பாங்க அதை வலது கையைக் குவிச்சு வாங்கி, அது கையிலிருந்து வழிஞ்சு ஓடாம இருக்க இடது கையை சப்போர்ட்டுக்கு கொடுத்து ம்ம் அது ஒரு தனிக் கலை.. அப்படித்தான் இன்னிக்கு நிவியும்(என் பொண்னு) ரெண்டு கையையும் குவிச்சு வச்சிருந்தது. உள்ளே பொங்கல் இல்லை கூழாங்கற்கள். மதியம் நிவியை விளையாட வெளிய கூட்டிட்டு போயிருந்தேன். போற …

Continue Reading

பதின் வயது

அ) கவிதைகள்

இருட்டின் வெளிச்சத்தில் தோன்றும் விண்மீனாய் பதின் வயதுகளில் பூப்பூக்கும் கனவுகள் அழகான அலைகடலில் ஆர்ப்பரிக்கும் பேரலையாய் பருவச் சுரப்பி வசம் அதிரடி ஆட்சிமாற்றம் எதிர்பாராத் தாக்குதலால் ஏதேதோ மாற்றங்கள் அன்பான உறவுகளும் அன்னியமாய்த் தெரிந்தன அருகிருக்கும் எல்லோரும் அறிவிலியாய்த் தோன்றினர் அக்கறையின் அரவணைப்பும் அணைக்கட்டாய் உறுத்தின அறிவுரைகள் செவிகட்கே அத்தியெனக் கசந்தன புரிதலே இல்லையென்று புலம்பிட வைத்தன பெரிசுகள் தொல்லையென்று போர்க்கொடி எழுப்பின விரும்பின வாழ்க்கைத்தேடி வெகுளியாய் உலகில் ஓடி தாக்கின நிஜத்தின் வலியில் தடைகளின் தடயம் …

Continue Reading

திரையிசையில் கவிதை – வெண்மதி வெண்மதியே

ஊ) நான் ரசிப்பவை

இந்தப் பாட்டுல அப்படி என்னதான் இருக்கு? எல்லோர் அடிமனசிலும் எப்போதும் இழையோடும் ஒருவிதமான சோகம் இந்த இசையில இருக்கே அதனாலயா? அழகான கவித்துவமான வரிகளா? என்னன்னு தெரியலை ஆனா எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வாலியின் வரிகள் ஜன்னலின் வழி வந்து விழந்தது மின்னலின் ஒளி அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே தீப்பொறி என இரு விழிகளும் தீக்குச்சி என எனை உறசிட கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே அவள் அழகை பாட …

Continue Reading

அடுப்பங்கரை

அ) கவிதைகள்

சுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி தென்ன மட்டய காயவச்சி வெறக நல்லா பொளந்துவச்சி அடுப்பில் நுழைச்சி பத்தவச்சி எண்ணை ஊத்தி எரியவச்சி மண் சட்டிய ஏத்தி வச்சி ஊதி ஊதி இருமி இருமி வறட்டி புகைய விரட்டி விரட்டி கண்ணைக் கசக்கி வாயப்பொத்தி அல்லும் பகலும் அனலில் வெந்து அமுதமுதாய்ச் சமைச்சிடுவ.. ரேஷன் கடை வாசல் போயி காலு வலிக்க கியூவில் நின்னு மண்ணெண்ணை வாங்கி வந்து பம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி கையெல்லாம் வலிக்க வலிக்க …

Continue Reading