அது ஒரு உயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரமான கட்டிடம். அங்கதான் நம்ம கதையின் நாயகன் தற்கொலை செய்துக்க போயிட்டிருந்தான். அவனுக்கு வயசு ஒரு பத்தொன்பது இல்ல இருபது இருக்குமா?.. இருக்கும்… இருக்கும். கருகருன்னு மீசை, அலை அலையா தலைமுடி, கண்ணுல சோகத்தையும் மீறின ஒரு குறுகுறுப்பு, வயதுக்கே உரிய ஒரு துடிப்பு.. இவன் ஏன் தற்கொலை செய்துக்கணும்?? புரியாத புதிரா இருக்கே.. ஒரு வேளை காதல் தோல்வியோ?.. இல்லை பரீட்சையில பெயில் ஆகிட்டானோ? ம்ம்.. சேச்சே இதெல்லாம் காரணமா இருக்காது.. வேற …
Author: geeths
சொர்க்கம் போக டிக்கெட்
மந்தமான மதியப் பொழுதில்.. மதியும் கொஞ்சம் மயங்கும் பொழுதில்.. இருக்கையில் அமர்ந்து கொண்டு இருவிழி மூடிக் கொண்டு சொர்க்கம் யாதென என்னுள் சொற்போர் நடத்த முனைந்தேன் சொர்க்கம் என்பதும் நிஜமோ சொற்களில் வாழ்ந்திடும் கனவோ பசியும் பிணியும் அங்குண்டோ? பாழும் பணமும் அங்குண்டோ? மண்ணுயிர் நீத்திடும் மக்கள் மாண்டதும் அங்கு செல்வாரோ? யாதது சொர்க்கம் என்று யாரிங்கு சொல்லிடுவாரோ? சட்டென சாலையில் ஏதோ சலசலப்பெழுவது கேட்டு வீதியில் எட்டிப் பார்த்தேன் வீதியில் மக்கள் வெள்ளம் வெறிச்சோடிக் கிடக்கும் …
ஜன்னலுக்கு அப்பால்..
சீரிய காற்றடிக்க சருகென உதிர்ந்த இலைகள் ஜிவ்வென மேலெழும்பி சிறகுடைய பறவை ஆகி விண்ணிலே நிரம்பி நின்று புள்ளென பயணம் செய்ய… உதவிக்கு வந்த காற்றும் உயரத்தில் விட்டுச் செல்ல அசையாமல் நின்றன மரங்கள் மழையென பொழிந்தன இலைகள் கருத்தது மேகம் தானோ கடல் அதில் குடிபுகுந்தானோ வைரத்தின் வாள்தனை வீசி படைநடுங்க கோஷங்கள் பேசி கடலவன் இறங்கியே வந்தான் மழையென்னும் பெயரினைக் கொண்டான் இயற்கையின் ஜாலம் இதனை வெறுத்திடும் மனிதரும் உண்டோ உண்டெனக் கண்டன விழிகள் …
பரீட்சை
படியென்று அன்னை சொல்கையிலே தேர்வு நாள் நெருங்கி வருகையிலே படித்தாயா என்று தோழி கேட்கையிலே எனக்கு படிக்கத் தோணலை இன்று தான் தேர்வு என்கையிலே தேர்வு மையத்தில் நுழைகையிலே பத்தே நிமிடங்கள் இருக்கையிலே பலவும் படிக்கத் தோன்றுதே பலநாள் படிக்காத பாடமெல்லாம் பத்தே நொடியில் படித்ததென்ன பத்தே நொடியில் படித்ததனை மணிக்கணக்காய் எழுதி தீர்த்ததென்ன படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர் பைத்தியம் தான் வாரோ? மதிப்பெண் தான் தருவாரோ? பாடத்தை மறந்துதான் போவாரோ?? 101202
ஒரு தேவதை வந்துவிட்டாள்
அக்டோபர் 25, 2006 எங்கள் வாழ்வில் இனியதொரு மாற்றம்.. நிவேதனா – இனிய தென்றலாய் பிறந்தாள் வாழ்த்திய நெஞ்சங்களுக்கு எங்கள் நன்றி அன்புடன் கீதா
பிரிதல்
அஷ்டமியா? – ஆகாது தேய்பிறையா? – கூடாது இராப்பொழுதா? – வேண்டாமே எத்தனையோக் காரணங்கள் தேடித்தேடி எடுத்துவந்தேன் ஏதோ சரியில்லையென நித்தம் பயணம் ஒத்திவைத்தேன் உண்மையிங்கு அதுவல்ல நிஜத்தை நம் மனமறியும் எல்லாம் இருந்தபோதும் பயணிக்க மனம்தான் இல்லை
பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 3 ( தீ )
சேர்கின்ற மாசுகளை தன்னுடனே சேர்த்தெரித்து ஊர்களிக்க ஜோதியாக ஆகியென்றும் – பார்தனிலே தீயவற்றைக் காண்கையிலும் ஓய்வுமின்றி தீர்த்தழிக்கும் தூயநெஞ்சம் கொள்ளசொல்லும் தீ. விளக்கம்: தீயானது தன்னுடன் சேரும்/ தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்து மாசுகளையும் தன்னுடன் சேர்த்து எரித்து மாசுகளை அழித்து விடும். அது போல மனிதன் தீயின் வடிவமாகி, தன்னுடன் தீய நட்போ / பிறவோ வரும் போது அதனையும் தன்னுடன் சேர்த்து மாசற்றதாக்க வேண்டும்.
பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 2 ( நீர் )
எத்தனையோ மாசுகண்டும் மீண்டுமது ஓங்கிநின்றும் அத்தனையும் தூயதாக்கி தூயவற்றை ஈன்றுநித்தம் சித்தமலம் சேர்க்குமந்த கோபதாபம் கொன்றுவாழும் சித்திவழி சொல்லிடுவாள் நீர். விளக்கம்: நீரானது தூய்மையின் வடிவம். ஓராயிரம் முறையும் ஒரு பொருளை மாசுபடுத்தினாலும் நீர் கொண்டு கழுவினால் அந்த பொருளின் மாசு அகன்றுவிடும். மனிதன் தன் மனதில் சேரும் கோபம் முதலான மாசுகள் மீண்டும் மீண்டும் தம்மை தாக்கும்போது நீரைப் போல தூய்மைபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் மனம் தளரக்கூடாது.
பஞ்சபூதம் சொல்லும் பாடம் – 1 ( நிலம் )
எத்துனைதான் வெட்டினாலும் ஆழ்குழிகள் தோண்டினாலும் அத்துனையும் தாங்கிநின்று பேருவகை எய்திநிந்தன் சித்தமதில் சிக்குகின்ற வேதனைகள் தாங்கிவாழும் புத்திசொல்வாள் பூவை நிலம். விளக்கம்: பூமியானது தன்னை எத்தனைதான் வெட்டினாலும், குழிகள் தோண்டினாலும் பொறுத்துக் கொள்வதோடல்லாமல் தன்னை வெட்டுபவரையும் தாங்கி பூமாதேவியென்னும் பெருமை பெற்று நிற்கும். அது போல மனிதன் தனக்கு நேரும் துன்பம், சோதனை ஆகியவற்றை கண்டு துவளாமல்,வேதனைப்படாமல், தன்னிலைமாறாமல் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, வாழும் வழி அறிந்து, வாழ்தல் வேண்டும்.
கனவுலகம்
கனவுலகில் காண்பதுவோ கற்பனைப் பூக்கள் நனவுலகோ முட்களுடன் நித்தம் – நனவின் மனவுலகில் மங்கையிவள் ஏற்றிடும் தீபம் கனவென்றா கும்முன்னே காண். விளக்கம்: கனவில், கற்பனையில் நாம் காண்பது இனிப்பான மனதிற்கு உவகை தரும் நிகழ்வுகளை. ஆனால் நிஜம் அதற்கு அப்பாற்பட்டது. நிஜம் எப்பொழுதும் நமக்கு பூக்களாக இருப்பதில்லை முட்களாக தைக்கவும் செய்யும். ஒரு மங்கை தன் கற்பனையில் தன் தலைவனுக்கு மாலை சூட்டி மகிழ்கிறாள். அந்த மகிழ்ச்சி பொய் என்று ஆகும் முன்னர் தன்னைக் காண …