வட்டமான அப்பமொன்று வானில் மிதந்து போகுது எட்ட நின்று பார்ப்பதற்கே எச்சில் நாக்கில் ஊறுது எட்டி யாரும் எடுக்கும்முன்னர் எடுக்க மனசு துடிக்குது எட்டிப் பார்த்தும் முடியவில்லை ஏங்கி மனசு தவிக்குது நின்று நானும் பார்த்துவந்தேன் நித்தம் அளவு குறையுது இன்று பார்க்க வந்தபோது இல்லாமல் அது போனது எடுத்துச்சென்ற கள்வன் யாரோ ஏழை மனசு கலங்குது கண்டு வந்து சொல்வார் யாரோ கலங்கும் மனசு கேட்குது
Category: அ) கவிதைகள்
கவிதை (22.11.02)
உள்ளத்தின் உணர்வுகள் உருக்கமான் நினைவுகள் வார்த்தையாய் வருகையில் வாழ்த்துவர் கவிதையென.
அர்த்தங்கள் (21/11/02)
அன்பெனக்கு நீ அளிக்க அதையே நான் உனக்களித்தால் அதிலென்ன ஆனந்தம் உண்டு நீ கொடுக்கா பொழுதினிலும் நானுனக்கு தொடர்ந்தளித்தால் அதுவே உண்மை அன்பென்பது நலமாக நீ இருந்து நலமா என்றென்னைக் கேட்டால் அதிலென்ன ஆறுதல் இருக்கிறது நலமற்று நீ இருந்தும் நினைவாக என் நலனைக் கேட்டால் அதுவன்றோ பிரியம் என்பது இறந்து நீ சென்றபின்பு உன் நினைவை பிறர் மறந்தால் அதிலென்ன பெருமை இருக்கிறது இறவாத உன் நினைவு பிறர் மனதில் வீற்றிருந்தால் அதுதானே வாழ்தல் என்பது.
பஞ்சபூதம் உணர்த்தும் பாடம் (29.11.02)
நிலம் எத்துனைதான் வெட்டினாலும் ழ்குழி பல தோண்டினாலும் தாங்கிடுவாள் உனையும் சேர்த்து பெ(¡)ருமைமிகு பூமி அன்னை துன்பம் வந்து நெருக்கும் போதும் துடிக்க துவள வைக்கும்போதும் பொருமை கொண்டு நீயும் வாழ்ந்தால் பெருகும் உந்தன் புகழுமிங்கு நீர் எத்துனைதான் அழுக்கிருந்தாலும் மற்றொருமுறை நீ மாசுபட்டாலும் சலிப்பின்றி உனை தூய்மைசெய்வாள் தூயவளான நீர் மங்கை கோவம் போன்ற மாசுகளெல்லாம் அடுக்கடுக்காய் உனை வந்தடைந்தாலும் தொடர்ந்து மனதினை தூய்மைபடுத்து தூயவன் நீயதை நெஞ்சினில் நிறுத்து நெருப்பு நிறைந்திருக்கும் மாசுகளெல்லாம் கொழுந்துவிட்டு …
காதலிசம்..2 (5-12-02)
உன்னுடனே நான் பேச எனக்கிங்கே சில நிமிடம் ஒருநொடியில் பேசிவிட வார்த்தைகள் ஓராயிரமாம்.. தோழி எனை அழைப்பதற்கு இதுதான உகந்த நேரம் சில நொடிகள் பேசிடினும் மணிக்கணக்காய் தோன்றிடுதே.. ஓடாத கடிகாரம் ஓடுவதேன் இந்நேரம் சில நொடியும் பறந்துவிட சிறகுகள் தாம் தோன்றியதோ ஒரு நிமிடம் பேசிவிட்டேன் உன்னுடனே என்னவனே வாழும் என் உயிரிங்கு இன்னும் ஒரு வாரகாலம்
காதலிசம்..1 (2-12-02)
பேசாத உன் விழியால் பேசுவது உன் இயல்போ? சொல்லாத வார்த்தைகளை சொல்வது உன் பார்வைதானோ? கேளாமல் என் இதயம் கேட்பதை நீ அறியாயோ? செல்லாமல் செல்வதென்ன என் உயிரும் உன்னோடு?
மரணம் (25-01-03)
மரணம் விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில் துக்கங்கள் தொடுவதில்லை தூக்கமும் கலைவதில்லை துடிக்க மறுத்த இதயத்தால் துடித்ததென்னவோ நாங்கள் தான் மரணம் மறுக்க இயலாத மலர்மாலை வேண்டிச் நின்றால் வருவதில்லை வந்தபின்னர் செல்வதில்லை தேடிச்சென்றால் பெருமையில்லை தேடிவந்தால் வரவேற்புமில்லை மரணம் சலனம் இல்லாத சாந்தநிலை இன்ப துன்பம் தெரிவதில்லை இழப்பும் உனக்கு புரிவதில்லை மண்ணில் வாழும் காலம் முடிய மனிதம் அற்றுபோகும் நிலை மரணம் மாற்ற முடியாத மாற்றுச் சட்டை மனித உடல் தேவையில்லை மண்ணில் இனி வாழ்வதற்கு …
திருட்டுகள் அம்பலம்
இருட்டுப் போர்வைக்குள் திருட்டுகள் பகல் வெளிச்சத்தில் அம்பலம் சிகரெட் துண்டுகள்
மாற்றம்
நேற்றும் இந்த சாலையில்தான் பயணித்ததேன்… இதுவரை தெரியாத மேடு பள்ளம் இன்று தெரிகிறது.. என்னுள் ஒர் உயிரின் ஜனனம்.
காலம்
வட்டத்தினுள் சதுரத்தை புகுத்திவிட நினைத்தேன் ஆனால் இன்று வட்டமே சதுரமாய் *** புத்தம் புது சில்லறையா சேர்த்து வச்சும் வீணாச்சே.. செல்லாக் காசு *** கல்மனசும் கரையுமின்னு கால் கடுக்க காத்திருந்தேன்.. கரைந்தது.. காலம்