அழகுக்குட்டி நிவிம்மா..

அ) கவிதைகள்

ஏ நிலவே.. வேடிக்கை போதும் என் செல்ல மகள் இப்பொழுது தான் கண்ணயர்ந்தாள் முகிலிடை மூழ்கிடு.. நின் ஒளிக்கரங்களால் வருடி வருடி அவளின் துயில் கலைத்து விடாதே ஆசை மிகின் தென்றலின் துணையொடு அவ்வப்பொழுது முகில் விலக்கி அவள் தூங்கும் அழகை இரசித்துக் கொண்டிரு என்னைப் போல்..

Continue Reading

எல்லோரும் இப்படித்தானா

அ) கவிதைகள்

மெய்யோ பொய்யோ அழகிய செடியின் இலைகள் நகம் தீண்டிய தழும்பேந்தி… **************** நண்பர்களே, நான் கண்ட ஒரு காட்சியையும்,அது என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வார்த்தைகளில் சிறைபிடிக்க நினைத்தேன்…. கையலம்பும் இடமருகில் கண்கவர் செடியொன்று மெய்யோ என்றறிந்திடவே இலையொன்றை ஸ்பரிசித்தேன் பாவம் அது…. பல்வேறு நகம் தீண்டி உடல்முழுதும் தழும்புகளாய்.. இதை ஹைக்கூவாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியது மேலேயுள்ள மூன்று வரிக் கவிதை. எப்படி இருக்கிறது? .. வேறு எப்படி எழுதலாம்? சொல்லுங்களேன்.

Continue Reading

தலைக்கு மேல டண் டணா டண் டண்

உ) அனுபவம் எழுதுது

மனசுக்குள்ள உட்கார்ந்து மணி அடிக்கலாம் ஆனா தலைக்கு மேல டமாரம் அடிக்கலாமா?? அடிக்கிறாங்களே.. நாங்க வசிக்கும் குடியிருப்பின் மேல் மாடிக்கு புதுசா ஒரு குடும்பம் வந்திருக்காங்க. அவரு , அவர் காதலி, அந்தம்மாவோட குழந்தை. இவர் பையன் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வந்து பார்த்துட்டு போவானாம். அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லிங்க.. என் பிரச்சனையெல்லாம் வீடே கடகடக்க அவங்க கேட்கிற சவுண்ண்ண்டு மியூசிக்தாங்க. இங்க எல்லாமே மரத்துனால செஞ்சதுதான் வீட்டின் தளம் உட்பட, அதனால மாடியில யாராவது சந்தோஷத்துல …

Continue Reading

உறங்கும் என் கவிதை

அ) கவிதைகள்

ஓயாத வேலை உன் பின்னே ஓட்டம் விளையாடும் நேரமெல்லாம் உன் வயதேதான் எனக்கும் காலை முதல் கனவு வரை ஏதேதோ எண்ணங்கள் குறிஞ்சியாய் பூக்கும் ஓரிரு கவிதைகளும் உயிர்பிக்க முடியாமல் ஓரத்தில் உறங்கிப்போகும் எங்கே தொலைந்துபோனேன்?? மீண்டும் கிடைப்பேனா?? எனக்கே எனக்கான நேரமும் கிடைக்குமா? இன்று கிடைத்தது நான் தேடும் என் நேரம் அப்பொழுதும்… உள்ளுக்குள் உறங்கும் கவிதையை எழுப்பாமல்.. வாய் குவித்து விரல் அசைத்து சிரித்து சிணுங்கி பதுமைபோல் உறங்கும் கவிதையான உன்னை இரசிக்கின்றேன் என்னவென்று …

Continue Reading

மாற்றம்

அ) கவிதைகள்

காலமகள் கொடியசைப்பில் கடந்தது பல ஆண்டு அன்பு நட்பு பாசம் கொண்டு கண்ட காட்சி கேட்ட சொற்கள் இன்றும் உண்டு நெஞ்சில் இங்கு அன்று கண்ட மக்கள் மட்டும் காணவில்லை மாறிப்போனார் காலச்சுழலில் வேறு ஆனார் மாற்றம் மட்டும் உண்மையென்றால் அன்பும்கூட பொய்மைதானோ? பழைய வாசம் தேடும் மனதே புரிந்துகொள்வாய் விழித்துக்கொள்வாய் வாழும் காலம் வேறு காலம்.

Continue Reading

நான் வளர்கிறேனே அம்மா

அ) கவிதைகள்

தண்ணீரில் தொலைபேசி தரையெங்கும் காகிதங்கள் மங்கள நீராடியதில் மோட்சத்தில் மடிக்கணிணி பூசைக்கு படைக்கும் பொருள் முடியும்வரை இருப்பதில்லை தேடும் பொருள் கிடைப்பதில்லை போன இடம் தெரிவதில்லை நொடிப்பொழுது அசட்டைக்கு கைக்கூலி சேதாரம் அத்தனையும் புலம்பலல்ல இரசித்து சுவைத்து சிரித்தவைதான் கவிதை எழுத உட்கார்ந்தால் காலைக்கட்டி முகம்நோக்கி தளர் நடையில் கிளர் மொழியில் கொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும் கொள்ளை கொண்ட மகள் செயல்தான் சந்திப்போம் கீதா

Continue Reading