In My Daughter’s Eyes

அ) கவிதைகள்

ஒரு ஆங்கிலப் பாடல் இது. நண்பர் ஒருவர் பரிந்துரைத்து அனுப்பியது. எனக்கும் பிடித்தது. முடிந்தவரை பாடலை சிதைக்காமல் தமிழாக்கம் செய்தேன்.

இது ஒரு தாய்/தந்தை பாடும் பாடல்..

அவர் என்னவாக இருக்கவேண்டும் என்று கனவு கண்டாரோ..அதுவாகவே அவருடைய மகளின் பார்வைக்கு அவர் காட்சி அளிக்கிறார்..

என் மகளின் பார்வைதனில்

என் மகளின் பார்வைதனில்
நானென்றும் நாயகன்தான்
நான் விரும்பும் நாயகனாய்
என் வடிவம் அவள் விழியில்
வலிமையுடன் திறமையுடன்
பயம் மறந்த தன்மையுடன்
என் மகளின் பார்வைதனில்
நானென்றும் நாயகன் தான்

என் மகளின் பார்வைதனில்
எல்லோரும் சமம்இங்கே
இருள் இங்கே ஒளியாகும்
உலகெங்கும் பகை போகும்
கடவுள் தந்த பரிசெனக்கு
கவின் கொடுக்கும் கலங்கயிலும்
என் மகளின் பார்வைதனில்
நம்பிக்கை ஒளி பிறக்கும்
என் விரலை அவள் தழுவ
என் இதயம் புன்னகைக்கும்
மனதின் இருள் விலகி நிற்க
வாழ்வின் பொருள் தெளிவாகும்
இதயத்தை ரணம் அழுத்த
ஏங்கும் மனம் திண்டாடும்
இருள் துடைக்கும் துகிலாக
அவள் விழிகள் ஒளி வீசும்

என் மகளின் பார்வைதனில்
என் பிம்பம் நான் கண்டேன்
என் மனதின் நாயகனாய்
இருமாந்து நான் நின்றேன்
என் மகளும் பிரிந்திடலாம்
புது வாழ்க்கை தொடங்கிடலாம்
என் ஜன்மம் முடிந்திடலாம்
ஆனாலும் வாழ்ந்திடுவேன்
என் மகிழ்வைக் கண்டிடுவீர்
என் மகளின் பார்வைதனில் …
—–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *