இருள் கவிந்த நள்ளிரவில்
நிலவும் உறங்கும் காரிருளிள்
மின் இணைப்பும் உறங்கிவிட
அவஸ்தையிலே விழித்து எழுந்தேன்
அந்தகனின் நிலையில் நானும்
அன்னை உடன் எழுந்து சென்று
அழகு விளக்கு ஏந்தி வந்து
அக்கறையாய் ஏற்றி வைத்தார்
பனித்துளியின் உருவம் கொண்டு
உயிர்பெற்ற வெளிச்சத் துளியின்
ஒளியெங்கும் பரவி நிற்க
உறைந்து நின்றேன் அழகினிலே
மின் இணைப்பு விழித்தவுடன்
விழித்துக் கொண்ட பேரொளியில்
துளி வெளிச்சம் மறைந்துவிட
மகிழ்ச்சி இல்லை மனதில் மட்டும்.