கத்தும் கடல் சத்தம் அது
எட்டும் திசை எட்டும்
நித்தம் அதன் மட்டம் தனில்
யுத்தம் உயிர் யுத்தம்
விண்ணும் ஒளிக் கண்ணும் அதில்
மின்னும் அலை மின்னும்
பொன்னோ இது பொன்னோ என
எண்ணும் விழி எண்ணும்
பாடும் கடல் ஆடும் அதில்
ஓடம் ஜதி போடும்
தேடும் வலை தேடும் அதில்
வாடும் உயிர் ஓடும்
கொல்லும் பகல் கொல்லும் அதை
வெல்லும் கலம் வெல்லும்
செல்லும் அது செல்லும் மரம் (பாய்மரம்)
சொல்லும் திசை செல்லும்
காயும் பகல் சாயும் அதன்
சாயம் கடல் பாயும்
தாயின் மடி சாயும் ஒரு
சேயும் என ஆகும்
சேரும் கலம் சேரும் அவை
சேரும் இடம் சேரும்
தோறும் தினந்தோறும் அதன்
ஆடல் அரங்கேறும்