எல்லோரும் சொல்கிறார்கள்..
நொடிப்பொழுதும் உன்னை
மறவாத என் மனதுக்கு
மறதி வந்துவிட்டதுவாம்..
கணம்தோறும் உன்குரலில்
மூழ்கும் என் செவிக்கு
கேட்கும் சக்தி இல்லையாம்
நாள்தேறும் உன்னுருவம்
காணும் என் விழிகள்
பார்வை இழந்துவிட்டதுவாம்
இவையெல்லாம் உண்மைதானோ?
கண் எதிரில் தோன்றும் காட்சி
கருத்தினில் பதிவதில்லை
காதினிலே விழும் வார்த்தை
என்னவென்று விளங்கவில்லை
என்ன நான் செய்தேனென்று
எனக்கே புரிவதில்லை..
பிறகு..
அவர்கள் சொன்னது உண்மைதானோ?