படிக்கும் முன் ஒரு முறை
நுகர்ந்து பார்க்கத் தூண்டும்
புத்தம் புதிய புத்தகத்தின் வாசமும்..
வீதியில் போகயிலும் நின்று
நாசி வரை நுழைந்து செல்லும்
அரைபடும் காப்பிக் கொட்டையின் வாசமும்..
வரண்டு போன பூமியில்
இயற்கை அன்னை கருணை மழை தூரி
கிளப்பி விட்டுச் செல்லும் மண் வாசமும்..
இவை எல்லாமும் கொடுக்கும் சந்தோஷம்
ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது
உன் பெயரை (சு)வாசிக்கும் ஒவ்வொரு முறையும்