உன்னுடனே நான் பேச
எனக்கிங்கே சில நிமிடம்
ஒருநொடியில் பேசிவிட
வார்த்தைகள் ஓராயிரமாம்..
தோழி எனை அழைப்பதற்கு
இதுதான உகந்த நேரம்
சில நொடிகள் பேசிடினும்
மணிக்கணக்காய் தோன்றிடுதே..
ஓடாத கடிகாரம்
ஓடுவதேன் இந்நேரம்
சில நொடியும் பறந்துவிட
சிறகுகள் தாம் தோன்றியதோ
ஒரு நிமிடம் பேசிவிட்டேன்
உன்னுடனே என்னவனே
வாழும் என் உயிரிங்கு
இன்னும் ஒரு வாரகாலம்