பஞ்சபூதம் உணர்த்தும் பாடம் (29.11.02)

அ) கவிதைகள்

நிலம்

எத்துனைதான் வெட்டினாலும்
ழ்குழி பல தோண்டினாலும்
தாங்கிடுவாள் உனையும் சேர்த்து
பெ(¡)ருமைமிகு பூமி அன்னை

துன்பம் வந்து நெருக்கும் போதும்
துடிக்க துவள வைக்கும்போதும்
பொருமை கொண்டு நீயும் வாழ்ந்தால்
பெருகும் உந்தன் புகழுமிங்கு

நீர்

எத்துனைதான் அழுக்கிருந்தாலும்
மற்றொருமுறை நீ மாசுபட்டாலும்
சலிப்பின்றி உனை தூய்மைசெய்வாள்
தூயவளான நீர் மங்கை

கோவம் போன்ற மாசுகளெல்லாம்
அடுக்கடுக்காய் உனை வந்தடைந்தாலும்
தொடர்ந்து மனதினை தூய்மைபடுத்து
தூயவன் நீயதை நெஞ்சினில் நிறுத்து

நெருப்பு

நிறைந்திருக்கும் மாசுகளெல்லாம்
கொழுந்துவிட்டு எரித்தழித்து
தூய்மை நிலை நாட்டிடுவாள்
அக்னி எனும் அழகு மங்கை

தீமை பல நேர்ந்த போதும்
தீய சொல்லைக் கேட்ட போதும்
மனதிலிருந்து அவற்றை அழித்து
வளர்க்க வேண்டும் நன்மை செழித்து

காற்று

மணமுமில்லை குணமுமில்லை
தன்மை மாசற்ற வாயுதான்
சுகந்தமோ அன்றி வேறொ -அவன்
செல்லுமிடத்தின் தன்மை தான்

அழுவதுவும் சிரிப்பதுவும்
என்றுமிங்கு நிலைப்பதில்லை
அந்த மணித்துளி மறைந்தால்
அத்தனையும் மறைந்துவிடும்

காயம்

திடமான பொருளுமில்லை
தீண்டிடுவார் எவருமில்லை
எங்கும் எங்கும் நிறைந்திருக்கும்
காயம் என்னும் அது

உருவம் இல்லா உண்மை ஜீவன்
இங்கும் அங்கும் எங்கும் உண்டு
பெருங்கடல் வெளியினிலே
சிறுதுளி உன் உள்ளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *