அவரவர் உலகம்

அ) கவிதைகள்

உலகையே சுமப்பதுபோல்
பையினைத் தலையில் சுமந்தபடி
வீதிதோறும் உலவிக்கொண்டிருக்கும்
விந்தையான ஒரு பெண்மணி..

வியாழக் கிழமை தோறும்
விதிபோலத் தவறிடாமல்
‘முருகா’ என்று அழைத்தபடி
யாசகம் கேட்கும் ஒரு தாத்தா..

ஒய்ந்த கால்களின் உதவியின்றி
உடைந்து போன சக்கரங்களை
கைகளின் உதவியில் ஓட்டியபடி
ஓயாமல் பயணிக்கும் தாத்தா..

எங்கு போவர்? என்ன செய்வர்?
இவர்களின் உலகத்தில் ஒரேநாள்
சஞ்சரிக்க எனக்கும் ஆசைதான்
ஆனாலும் தடுக்கிறது என் உலகம்..

1 thought on “அவரவர் உலகம்”

  1. புதிய ஷூ வாங்கித்தான் ஆகவேண்டும் என நச்சரித்த சிறுவன்
    காலில்லாதவனின் கதியைப் பார்த்து உளம் நெகிழ்ந்த கதை
    நினைவுக்கு வருகிறது.

    சுப்பு ரத்தினம்.
    ஸ்டாம்ஃபோர்டு, யூ.எஸ்.ஏ.

Leave a Reply to subburathinam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *