மதம் (6.10.2003)

அ) கவிதைகள்

மதம் பிடித்த மனிதனுக்கு மனதின் வலியும் புரியுமோ? மகாத்மாக்கள் பெற்ற மண்ணில் மானுடம்தான் தோற்குமோ? வியர்வை மழையில் விளைந்த பயிரை குருதி வெள்ளம் அழிக்குமோ ஒற்றுமையில் உயர்ந்த மண்ணை வேற்றுமை நீர் அரிக்குமோ? புல்லுருவிகல் புகுந்து நம்முள் புதிய குழப்பம் விளைக்குமோ? ஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம் உரக்கச் சிரித்து மகிழுமோ? அன்னை மடியில் அமர்ந்து கொண்டே அவளுக்கிங்கு துரோகமோ? மகவிரண்டை மோதவிட்டே வாழ்வதுதான் மானமோ? இன்றும் நமக்கு ஓருயிர்தான் மாற்றம் ஏதும் நிகழ்ந்ததோ? உதிர வெள்ளம் …

Continue Reading

நட்பு (7.4.2003)

அ) கவிதைகள்

நட்பென்னும் பாதை தன்னில் நடக்கின்றேன் பல காதம் கடக்கின்ற வழி தோறும் பயில்கின்றேன் பல பாடம் என்னை நான் உணர்ந்த்துகொள்ள உதவியதென் நட்பேதான் என்னை நான் உணர்த்திச்செல்ல ஊக்கம் தரும் நட்பேதான் நட்பென்னை வளர்க்கையிலே நான் பிள்ளை கிப்போனேன் உருவத்தில் மட்டுமின்றி உள்ளத்தும் வளருகின்றேன் நண்பர் சிலர் வருவதுவும் வந்த சில மறைவதுவும் நான் கடக்கும் பாதைதன்னில் காலமும் கடந்து செல்ல.. நிழலுருவம் மறைந்தாலும் நினைவு என்றும் மாறாது நட்புடனே நான் நடக்க நண்பர் என்னைச் சூழ்ந்திருக்க …

Continue Reading

வட்ட அப்பம் (24.1.2003)

அ) கவிதைகள்

வட்டமான அப்பமொன்று வானில் மிதந்து போகுது எட்ட நின்று பார்ப்பதற்கே எச்சில் நாக்கில் ஊறுது எட்டி யாரும் எடுக்கும்முன்னர் எடுக்க மனசு துடிக்குது எட்டிப் பார்த்தும் முடியவில்லை ஏங்கி மனசு தவிக்குது நின்று நானும் பார்த்துவந்தேன் நித்தம் அளவு குறையுது இன்று பார்க்க வந்தபோது இல்லாமல் அது போனது எடுத்துச்சென்ற கள்வன் யாரோ ஏழை மனசு கலங்குது கண்டு வந்து சொல்வார் யாரோ கலங்கும் மனசு கேட்குது

Continue Reading

ஒரு ஜென் கதை

ஈ) கதை கேளு கதை கேளு

ஒரு ஜென் கதை படிக்க நேர்ந்தது — ஒரு குரு தம் சீடர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் ‘கனமழை பெய்யும் சமயம் இருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்’ ‘அதில் ஒருவர் மட்டும் மழையில் நனையவில்லை’ ‘இது ஏன்’ என்று குரு வினவினார் சீடர்கள் பலவாறு தம் கற்பனைகளை விடையாக கூறினர் ‘ ஒரு வேளை ஒருவன் குடை கொண்டு சென்றிருக்கலாம்’ ‘ஒரு வேளை ஒருவன் சாலையோரமாக் உள்ள நிழற்குடையில் நடந்து சென்றிருக்கலாம்’ பலவாறு விடைகள் வந்தன எதுவும் …

Continue Reading

அர்த்தங்கள் (21/11/02)

அ) கவிதைகள்

அன்பெனக்கு நீ அளிக்க அதையே நான் உனக்களித்தால் அதிலென்ன ஆனந்தம் உண்டு நீ கொடுக்கா பொழுதினிலும் நானுனக்கு தொடர்ந்தளித்தால் அதுவே உண்மை அன்பென்பது நலமாக நீ இருந்து நலமா என்றென்னைக் கேட்டால் அதிலென்ன ஆறுதல் இருக்கிறது நலமற்று நீ இருந்தும் நினைவாக என் நலனைக் கேட்டால் அதுவன்றோ பிரியம் என்பது இறந்து நீ சென்றபின்பு உன் நினைவை பிறர் மறந்தால் அதிலென்ன பெருமை இருக்கிறது இறவாத உன் நினைவு பிறர் மனதில் வீற்றிருந்தால் அதுதானே வாழ்தல் என்பது.

Continue Reading

பஞ்சபூதம் உணர்த்தும் பாடம் (29.11.02)

அ) கவிதைகள்

நிலம் எத்துனைதான் வெட்டினாலும் ழ்குழி பல தோண்டினாலும் தாங்கிடுவாள் உனையும் சேர்த்து பெ(¡)ருமைமிகு பூமி அன்னை துன்பம் வந்து நெருக்கும் போதும் துடிக்க துவள வைக்கும்போதும் பொருமை கொண்டு நீயும் வாழ்ந்தால் பெருகும் உந்தன் புகழுமிங்கு நீர் எத்துனைதான் அழுக்கிருந்தாலும் மற்றொருமுறை நீ மாசுபட்டாலும் சலிப்பின்றி உனை தூய்மைசெய்வாள் தூயவளான நீர் மங்கை கோவம் போன்ற மாசுகளெல்லாம் அடுக்கடுக்காய் உனை வந்தடைந்தாலும் தொடர்ந்து மனதினை தூய்மைபடுத்து தூயவன் நீயதை நெஞ்சினில் நிறுத்து நெருப்பு நிறைந்திருக்கும் மாசுகளெல்லாம் கொழுந்துவிட்டு …

Continue Reading

காதலிசம்..2 (5-12-02)

அ) கவிதைகள்

உன்னுடனே நான் பேச எனக்கிங்கே சில நிமிடம் ஒருநொடியில் பேசிவிட வார்த்தைகள் ஓராயிரமாம்.. தோழி எனை அழைப்பதற்கு இதுதான உகந்த நேரம் சில நொடிகள் பேசிடினும் மணிக்கணக்காய் தோன்றிடுதே.. ஓடாத கடிகாரம் ஓடுவதேன் இந்நேரம் சில நொடியும் பறந்துவிட சிறகுகள் தாம் தோன்றியதோ ஒரு நிமிடம் பேசிவிட்டேன் உன்னுடனே என்னவனே வாழும் என் உயிரிங்கு இன்னும் ஒரு வாரகாலம்

Continue Reading

காதலிசம்..1 (2-12-02)

அ) கவிதைகள்

பேசாத உன் விழியால் பேசுவது உன் இயல்போ? சொல்லாத வார்த்தைகளை சொல்வது உன் பார்வைதானோ? கேளாமல் என் இதயம் கேட்பதை நீ அறியாயோ? செல்லாமல் செல்வதென்ன என் உயிரும் உன்னோடு?

Continue Reading

மரணம் (25-01-03)

அ) கவிதைகள்

மரணம் விழிப்பு மறுக்கப்பட்ட ஆழ்துயில் துக்கங்கள் தொடுவதில்லை தூக்கமும் கலைவதில்லை துடிக்க மறுத்த இதயத்தால் துடித்ததென்னவோ நாங்கள் தான் மரணம் மறுக்க இயலாத மலர்மாலை வேண்டிச் நின்றால் வருவதில்லை வந்தபின்னர் செல்வதில்லை தேடிச்சென்றால் பெருமையில்லை தேடிவந்தால் வரவேற்புமில்லை மரணம் சலனம் இல்லாத சாந்தநிலை இன்ப துன்பம் தெரிவதில்லை இழப்பும் உனக்கு புரிவதில்லை மண்ணில் வாழும் காலம் முடிய மனிதம் அற்றுபோகும் நிலை மரணம் மாற்ற முடியாத மாற்றுச் சட்டை மனித உடல் தேவையில்லை மண்ணில் இனி வாழ்வதற்கு …

Continue Reading