படியென்று அன்னை சொல்கையிலே
தேர்வு நாள் நெருங்கி வருகையிலே
படித்தாயா என்று தோழி கேட்கையிலே
எனக்கு படிக்கத் தோணலை
இன்று தான் தேர்வு என்கையிலே
தேர்வு மையத்தில் நுழைகையிலே
பத்தே நிமிடங்கள் இருக்கையிலே
பலவும் படிக்கத் தோன்றுதே
பலநாள் படிக்காத பாடமெல்லாம்
பத்தே நொடியில் படித்ததென்ன
பத்தே நொடியில் படித்ததனை
மணிக்கணக்காய் எழுதி தீர்த்ததென்ன
படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்
பைத்தியம் தான் வாரோ?
மதிப்பெண் தான் தருவாரோ?
பாடத்தை மறந்துதான் போவாரோ??
101202
நன்று கீதா!
//படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்
பைத்தியம் தான் வாரோ?
மதிப்பெண் தான் தருவாரோ?
பாடத்தை மறந்துதான் போவாரோ??
//
:))
மறந்துதான் போயிருப்பார்.
ரொம்ப நாள் கழிச்சி திரும்பி வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!
கட்சி நேரத்துல பட்ச கொஸ்டினுதான் பரீட்சயில வரும்.. நாமோ பாதிதான் பட்சிருப்போம்.. அதுலயும் பாதிதான் ஞியாபகம் வரும்.. முக்காவாசிக்கு நாமோ எயுதுவோம் பாருங்க கத.. அய்ன்ஸ்டீனுக்கு கூட நம்ப அளவுக்கு அறிவு இருக்குமான்னு பேப்பர திருத்தறவருக்கே டவுட்டு வர்ற மாறி.. அந்த டவுட்டுலய நம்பள பாஸ் ஆக்கிடுவாங்க..
சூப்பரான் கவிஜ..
தாங்ஸ்
ம்ம்ம்… நீங்களும் நம்மக் கேசுதானா? 😉
சிபியண்ணே, அருட்பெருங்கோ, அரைபிளேடு..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ஆமாமாம் எல்லாம் அனுபவம்தானே பேசுது 🙂
எல்லாரும் (படிப்பு விஷயத்துல) ஒரே formula தான் உபயோகிப்பாங்க போல 🙂
அன்புடன்
கீதா
Brief narration of a last bech student’s exam woes