ஜன்னலுக்கு அப்பால்..

அ) கவிதைகள்

சீரிய காற்றடிக்க
சருகென உதிர்ந்த இலைகள்
ஜிவ்வென மேலெழும்பி
சிறகுடைய பறவை ஆகி
விண்ணிலே நிரம்பி நின்று
புள்ளென பயணம் செய்ய…
உதவிக்கு வந்த காற்றும்
உயரத்தில் விட்டுச் செல்ல
அசையாமல் நின்றன மரங்கள்
மழையென பொழிந்தன இலைகள்

கருத்தது மேகம் தானோ
கடல் அதில் குடிபுகுந்தானோ

வைரத்தின் வாள்தனை வீசி
படைநடுங்க கோஷங்கள் பேசி
கடலவன் இறங்கியே வந்தான்
மழையென்னும் பெயரினைக் கொண்டான்

இயற்கையின் ஜாலம் இதனை
வெறுத்திடும் மனிதரும் உண்டோ
உண்டெனக் கண்டன விழிகள்
ஆம், என் ஜன்னலுக்கு அப்பால்
 

4 thoughts on “ஜன்னலுக்கு அப்பால்..”

 1. வாங்க ஞானசேகர்

  யாருக்கும் புரியாதுன்னு நினைச்சேன்.. நீங்க ஒருத்தர் புரிஞ்சு ரசிச்சு பின்னூட்டமிட்டது நிறைவா இருக்கு

  உண்மையில் கடைசி வரிகள்தான் நான் சொல்ல நினைத்தது. தள்ளி நின்னு பார்க்கிறவங்களுக்கு இயற்கையில் எல்லாமே அழகா இருக்கலாம்.. ஆனா அதுல கிடந்து கஷ்டப்படுறவங்களுக்குதான் அவ்வளவா இரச்சிக்கிறதில்லை..

  நன்றி

  அன்புடன்
  கீதா

 2. உயர்ந்த இலைகள் உதிர்ந்த இலைகள் தானே ?
  மழைக்குப்பின் முளைத்தளவா புது இலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *